பகவான் ஶ்ரீ பலராமர்



ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பகவான் கிருஷ்ணர், பூமியில் அவதரித்தார். அவரோடு, அவரது சகோதரராக பலராமர் அவதரித்தார். யமுனை நதிக்கரையிலிருந்த விருந்தாவனம் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள். இரு சகோதரர்களும் எல்லையில்லா அழகை பெற்றிருந்தனர். கிருஷ்ணர், கார்மேக வண்ணத்தோடும் தாமரை கண்களோடும், புல்லாங்குழல் கொண்டு காணப்பட்டார். பலராமர் வெள்ளை நிறத்தோடு, தாமரை கண்களோடு, கருநிற கூந்தலோடு கலப்பையோடு காணப்பட்டார். கிருஷ்ணர் எப்போதும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார். பலராமர் எப்போதும் நீல நிற ஆடைகள் அணிந்திருந்தார். 


அவர்களுடைய தந்தையான நந்த மஹாராஜர் மற்றும் தாய் யசோதா தேவிக்கு சொந்தமாக ஒன்பது லட்சம் பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து வரும் பாலை கொண்டு, தயிர், மோர், வெண்ணை மற்றும் நெய் கிடைத்தது. மேலும் எருதுகள் விவசாயம் மற்றும் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. விருந்தாவன வாசிகளுக்கு போதுமான அளவு பழங்கள் மற்றும் தானியங்கள் கொடுத்தது போக மீதமிருந்தால் அவர்கள் அருகிலிருக்கும் கிராமத்து மக்களோடு பண்டமாற்று முறைப்படி, அதிக விளைச்சலை கொடுத்து, அதற்கு நிகரான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் வாங்குவர். இவ்வாறாக விருந்தாவனத்தில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்ந்தனர்.


விருந்தாவன வாசிகள் அனைவரும் தங்களின் உயிரினும் மேலாக கிருஷ்ணரை நேசித்தனர். ஆறு வயதானவுடன், கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் கன்றுக்குட்டிகளை மேய்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. கன்றுக்குட்டிகளுடன் தினமும் காலையில் கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவருடைய நண்பர்கள் தங்கள் தாய் தரும் உணவை எடுத்துக்கொண்டு மேய்ச்சலுக்கு, வனத்திற்கு செல்வார்கள். அங்கே கன்றுக்குட்டிகளை மேய விட்டு விட்டு இவர்கள் அனைவரும் விளையாடுவார்கள். யமுனை நதியின் குளிர்ந்த நீர், பறவைகளின் ஓசை, மலர்களின் நறுமணம், வனத்தின் தென்றல் காற்று, கோவர்தன மலையிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி -  என அனைத்தயும் ரசித்தனர்.


மரங்கள், தங்கள் கிளைகளை வளைத்து, கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் பழங்களை வழங்கும்.  அவர்கள் மகிழ்ச்சியாக உண்பார்கள். நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, ஓடி பிடித்து விளையாடுவது, மல்யுத்தம் செய்வது, விலங்குகள் போல குரல் எழுப்புவது மற்றும் நடித்து காட்டுவது, ஒளிந்து விளையாடுவது - என மிகவும் மகிழ்ச்சியாக பகல் வேளையை கழிப்பார்கள்.  சூரியன் அஸ்தமிக்கும் சமயம், விருந்தாவன வாசிகள், அவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். விருந்தாவனத்தின் கோபிகைகள் அனைவரும் கிருஷ்ணர் மீது ஆசை கொண்டார்கள். பௌர்ணமி நிலவில், யமுனை நதிக்கரையில், கிருஷ்ணரும் கோபிகைகளும் நடனமாடுவார்கள். 


ஒரு முறை, கிருஷ்ணரும் பலராமரும் அருகிலிருக்கும் நகரமான மதுராவிற்கு சென்றார்கள். திரும்பிவருவதாக விருந்தாவனவாசிகளிடம் வாக்களித்த அவர்கள், அதற்குப்பின்னர் விருந்தாவனம் திரும்பவே இல்லை. நந்த மகாராஜா, யசோதா தேவி, கோபர்கள் மற்றும் கோபிகைகள் என அனைவரும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்தனர். 


ஆண்டுகள் பல கழித்து, கிருஷ்ணரும் பலராமரும் துவாரகைக்கு இளவரசர்களானார்கள். விருந்தவனத்திலிருந்த எளிமையான வாழ்விற்கு நேர் மாறாக, இங்கே அரண்மனையில் அனைத்தும் ஆடம்பரமாக இருந்தது. அவர்களுடைய மனைவிகள், குழந்தைகள், மந்திரிகள், பணியாட்கள் மற்றும் படை வீரர்கள் என பெரும் மக்கள் கூட்டம் இருந்தது.


ஒருமுறை, தனது தாய் தந்தையரை பார்க்க ஆவல் கொண்ட பலராமர், விருந்தாவனத்திற்கு சென்றார். அங்கு அவரை கண்ட விருந்தவன வாசிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். கோபர்களும் வளர்ந்திருந்தனர். நந்த மஹாராஜாவும் யசோதா தேவியும் கிருஷ்ணரை நலம் விசாரித்தனர். கோபிகைகளுக்கு கிருஷ்ணரை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவர்கள் பலராமரிடம், "கிருஷ்ணர் எங்களை நினைவில் வைத்திருக்கிறாரா? அவர் விருந்தாவனம் வருவாரா? துவாரகா நகரத்து பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். அப்படியிருக்கையில், கிருஷ்ணர் கிராமத்தினரான எங்களை ஞாபகம் வைத்திருப்பாரா?" என்று கேட்டு வருந்தினார். கிருஷ்ணருடைய பிரிவை தாங்க முடியாமல் அவரை நினைத்து அழ தொடங்கினர். 


அவர்களை சமாதானப்படுத்த எண்ணிய பலராமர், சிறிது காலம் அங்கேயே தங்கி, கிருஷ்ணரின் லீலைகளை தினமும் விருந்தாவன வாசிகளுக்கு கூறி வந்தார். ஒரு முறை யமுனை நதிக்கரையில் அமர்ந்து, பலராமர், காட்டு தேனில் செய்யப்பட்டிருந்த ஒரு பானத்தை அருந்தினார். பின்னர் யமுனையில் குளிக்க எண்ணினார். ஆகையால் யமுனாதேவியை தன்ருகில் வரும்படி அழைத்தார். ஆனால் பலராமர் சோமபானம் அருந்தியிருப்பதாக எண்ணிய யமுனாதேவி, அருகில் வர மறுத்தார். மிகவும் கோபம் கொண்ட பலராமர், தனது கலப்பையை கொண்டு, "நீ இப்போது வரவில்லையென்றால், நன் உன்னை நூற்றுக்கணக்கான நீரோடைகளாக மாற்றி விடுவேன்", என்று கூறினார். பயந்த யமுனா தேவி, அவர் முன் தோன்றினார். கரங்களை கூப்பி பலராமரிடம் மன்னிப்பு வேண்டினர். பலராமரும் மன்னித்தார். பின்னர் அணைத்து கோபியர்களுடனும் யமுனையில் நீராடி மகிழ்ந்தார். 


பலராமரின் கலப்பை பட்டதால், இன்றும் யமுனைக்கு பல கிளிகள் உள்ளன. இரண்டு மாதங்கள், விருந்தாவன வாசிகள் அனைவரும் பலராமரோடு, தங்கள் வாழ்வின் இறுதி இரண்டு மாதங்கள் போல கழித்தனர். கிருஷ்ணரும் பலராமரும் என்றும் அவர்களோடு இருப்பதாய் உணர்ந்தார்கள்.




  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more