பக்தர்களை நிராகரிப்பதை விட அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது
ஸ்ரீல பிரபுபாதர்: இப்போது அவர்கள் சந்நியாசி பக்தரின் கட்டளைகளைக் கேட்டு நடக்க வில்லை என்றால் பொதுவாக...ஆனால் இந்த விசயம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பின் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதாவது."உங்களால் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியவில்லையென்றால் கண்டிப்பாக நீங்கள் வெளியேறிவிட வேண்டும். இது மிகத் தெளிவான விசயம். இதில் சண்டை என்ற கேள்விக்கே இடமில்லை. முக்கியமான விசயம் என்னவென்றால் சந்நியாசி பக்தர்கள் அல்லது தலைமைப் பொறுப்பில் இருக்கும் பக்தர்கள் தாங்கள் முதலில் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பிறகு மற்றவர்களையும் பின்பற்றும்படி கேட்க வேண்டும். யார் இதைப் பின்பற்றவில்லையோ முதல் முறை இரண்டாவது முறை என விட்டுப்பார்க்கலாம். அதன்பிறகு மூன்றாவது முறையும் பின்பற்றி நடக்கவில்லையெனில், "தயவு செய்து வெளியேறி விடுங்கள் என்று சொல்லிவிட வேண்டியது தான்.
ஷியாமசுந்தர்: கொள்கைகளைப் பின்பற்றி நடந்தால் அவர் தானாகவே மதிக்கப்படுவார்.
அச்யுதானந்தர்: அப்படியென்றால் நான் சிலபேரை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் அவர் எப்படி வெளியே செல்வார்? அவரின் பயணத்திற்குப் பணம் அவரிடம் வாங்க வேண்டும் அல்லது ஏதாவது...ஒரு பையன் இருந்தான்...அவன்....
ஸ்ரீல பிரபுபாதர்: வெளியேற்ற வேண்டும் என்றால் அவரை வேறு மையத்திற்கு மாறச் செய்யலாம்.
அச்யுதானந்தர்: அவரை வெளியேற்ற நான் விரும்பினேன். ஆனால் அவர் எங்கு செல்வார்? அவருடைய பயணத்திற்கான பணத்தை யார் தருவார்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: பிறகு முடிவான ஒரு விசயம் என்னவென்றால், நாம் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களை இவ்வியக்கத்திற்கு கொண்டுவர பிரச்சாரம் செய்யகிறோம். ஆட்களை வெளியேற்றுவது நமது வேலை இல்லை. ஆனால் ஒருவரை சரி செய்ய இயலவில்லையென்றால் அவர் வெலியே செல்ல வேண்டியதுதான்.
நீங்கள் எதற்காக இவ்வளவு பிரச்சாரம் செய்கின்றீர்கள்? ஆட்களை கொண்டுவருவதற்காக, அவர்களை வெளியே போகசொல்வதற்காக அல்ல. சிறிய அற்பமான காரணங்களுக்காக, நீங்கள் கேட்டால், அது இல்லை...
பக்தர்: இது ஒரு அற்பமான காரணம் அல்ல.
ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவர் தன்னை தானே சரி செய்ய இயலாத போது நீங்கள் அவரை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இதுதான் பிரச்சாரம். நமது பிரச்சாரம் எப்படியிருக்க வேண்டுமென்றால்... பயனற்ற நிலையிலிருக்கும் மக்களை கிருஷ்ண உணர்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய வகையில் அவர்களுக்கு நாம் பயிற்சி அளிக்க வேண்டும். அதுதான் நமது நிர்வாகம். ஆனால் அவர் முற்றிலும் தவறானவர் என்றால்..பிறகு அவர் வெளியேறும் படி கேட்டுக் கொள்ளப்படுவார். மாறாக ஏதோ ஒரு தவறு நடந்திருப்பதைக் கண்டவுடன் அவரை வெளியேற்றுவது நம்முடைய பணியும் அல்ல. அவர் கண்டிப்பாக நல்ல முறையில் பயிற்றுவிக்கப் பட வேண்டும்..எப்படி?...நாம் அவர்களுக்கு உதாரணமாக இருப்பதன் மூலமாக, நம்முடைய போதனைகள் மூலமாக, நம்முடைய சேவைகளின் மூலமாக. "சாந்த யாம் சின்வந்தி குடி:"[?] வார்த்தைகளின் மூலமும், எடுத்துக்காட்டாக இருப்பதன் மூலமாகவும் அவர் திருத்தப்பட வேண்டும். என்னுடைய வார்த்தைகள் மற்றும் உதாரணமாக இருப்பதன் மூலமும் அவரை திருத்த முடிய வில்லையென்றால் நானும் தெளிவாக இல்லையென்றுதான் அர்த்தம். ஏனென்றால் அவர்கள்...அவர்கள்...எல்லோரும் இங்கு சாதுவாக வரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அது அப்படியல்ல. நாம் சாதாரண மனிதர்களையே கொறடுவருகிறோம், அவர்களை சாதுவாக நாம் உருவாக்குகிறோம். அதுதான் பிரச்சாரம். அதை நீங்கள் சாமர்த்தியமாக செய்ய வேண்டும். சரிசெய்ய முடியாதவர்களென்று யாரும் இல்லை. அனைத்து வழிகளில் முயற்சித்தும் அவரை திருத்த முடியவில்லையென்றால் அப்போது நீங்கள் சொல்லலாம். மாறாக சிறிய காரணங்களுக்காகவெல்லாம் வெளியேற்றக் கூடாது. அவ்வாறு நீங்கள் வெளியேர்றிக் கொண்டிருந்தால் பிறகு எல்லாம் வெளியேற வ்டேண்டிவரும். அது நம்முடைய கொள்கை அல்ல. கொள்கை என்னவெனில் முதலில் அவரைத் திருத்த முயற்சி செய்வதுதான். அதுதான் பிரச்சாரம். முடிந்தவரை உதாரணமாக இருங்கள். கற்பித்தலின் மூலம் அல்லது எல்லாவற்றின் மூலமாகவும் உதாரணமாக இருங்கள்.
ஸ்ரீல பிரபுபாதர் தனது சந்நியாசி பக்தர்களுடன் அறையில் உரையாடியது. - மார்ச் 15, 1974, விருந்தாவனம். ஹரே கிருஷ்ண
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment