ஹரிவம்ஷ ( விஷ்ணு பர்வ அத்தியாயம் 19) எனும் சாஸ்திரத்தில் கோலோக விருந்தாவனத்தை பற்றி பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் கோவர்த்தன மலையை உயர்த்திய பின்னர் சொர்க்க லோகத்தின் மன்னனான இந்திரன் அவரிடம் சரணடைந்தான். அப்போது மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் பறவைகள் பறக்கக்கூடிய ஆகாயம் உள்ளது என்று இந்திரன் கூறினான். அந்த ஆகாயத்திற்கு மேல் சூரியனும் அதன் சுழற்சிக்கான பாதையும் உள்ளது இது ஸ்வர்க்க லோகத்திற்கான நுழைவாயிலாகும். ஸ்வர்க லோகங்களுக்கு மேலே பிரம்மலோகம் வரை உள்ள இதர லோகங்களில் ஆன்மீக அறிவில் முன்னேற்றம் பெற்றவர்கள் வசிக்கின்றனர். பிரம்மலோகம் வரையுள்ள லோகங்கள் பௌதிக உலகின் (தேவி தாமத்தின்) பகுதிகளாகும் இந்த உலகம் துர்கா தேவியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இது தேவி தாமம் என்று அறியப்படுகிறது.
தேவி தாமத்திற்கு மேலே சிவபெருமான் தமது மனைவியான உமாவுடன் வசிக்கும் லோகம் உள்ளது. ஆன்மீக ஞானத்தில் பிரகாசமாக இருப்பவர்களும் பௌதீக களங்கங்களிலிருந்து முக்தி பெற்றவர்களும் அந்த சிவ லோகத்தில் வசிக்கின்றனர்.
அந்த லோகத்திற்கு அப்பால் ஆன்மீக உலகம் உள்ளது அங்கே வைகுண்டம் என்று அறியப்படும் கிரகங்கள் உள்ளன. கோலோக விருந்தாவனமானது எல்லா வைகுண்ட லோகங்களுக்கு அப்பால் அமைந்துள்ளது .கோலோக விருந்தாவனம் கிருஷ்ணரது பெற்றோர்களுக்கும்( நந்த மகாராஜர் அன்னை யசோதை) ஸ்ரீமதி ராதாராணிக்கும் உரிய ராஜ்ஜியமாகும். இவ்விதமாக பல்வேறு லோகங்கள் உள்ளன அவையாவும் முழுமுதற் கடவுளின் படைப்புகளாகும்.
கோலோக விருந்தாவனம் எனப்படும் லோகத்தின் கீழ்ப்பகுதியில் தேவி தாமம், மகேஷ தாமம், ஹரி தாமம் எனப்படும் லோகங்கள் உள்ளன. இவை தத்தமது வழிகளில் வெவ்வேறு ஐஸ்வர்யங்களை கொண்டுள்ளன இவை அனைத்தும் ஆதி புருஷனான முழுமுதற்கடவுள் கோவிந்தரால் நிர்வகிக்கப்படுகின்றன. நான் எனது வணக்கங்களை அவருக்கு அர்ப்பணிக்கப்பதாகட்டும்
பிரம்ம சம்ஹிதையில் (5.43)
எனவே கோலோக விருந்தாவன தாமமானது வைகுண்ட லோகங்களுக்கு மேலே அமைந்துள்ளது . எல்லா வைகுண்ட லோகங்களையும் உள்ளடக்கிய ஆன்மீக வானமானது கோலோக விருந்தாவனத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியதாகும். கோலோக விருந்தாவன தாமத்தால் நிரப்பப்பட்டுள்ள இடமான மஹாகாஷ "எல்லா ஆகாயங்களிலும் மிகப்பெரிய ஆகாயம் " என்று கூறப்படுகிறது.
தேவேந்திரன் கூறினான் "நாங்கள் பிரம்மதேவரிடம் உங்களுடைய நித்திய லோகத்தினைப் பற்றி வினவினோம் ஆனால் எங்களால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. புலன்களையும் மனதையும் புண்ணிய செயல்களையும் கொண்டு கட்டுப்படுத்தப்படக்கூடிய கர்மிகள் ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெற முடியும். பகவான் நாராயணரின் சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ள தூய பக்தர்கள் வைகுண்ட லோகங்களுக்கு உயர்த்தப்படுகின்றனர். ஆயினும் அன்புள்ள கிருஷ்ணரே உங்களுடைய கோலோக விருந்தாவனத்தை அடைவது மிகவும் கடினமானதாகும். இருப்பினும் நீங்களும் அந்தப் பரம லோகமும் தற்போது இங்கே இந்த பூமியில் அவதரித்துள்ளீர். துரதிர்ஷ்டவசமாக நான் என்னுடைய தீயசெயல்களின் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளேன். அது எனது முட்டாள்தனத்தினால் விளைந்ததாகும் எனவே நான் உங்களை பிரார்த்தனைகளின் மூலமாக திருப்தி செய்ய முயல்கிறேன்."
(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்./ மத்யலீலை 23.116)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment