பஜுஹரே மன ஸ்ரீ நந்த-நந்தன
(கோவிந்த தாஸ கவிராஜ்)
1.
பஜஹுரே மன ஸ்ரீ-நந்த-நந்தன
அபய-சரணார விந்தரே
துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே
தரோஹோ ஏ பவ-ஸிந்து ரே
2.
ஸீத ஆதப பாத பரிஷண
ஏ தின ஜாமினி ஜாகி ரே
பிபலே ஸேவினு க்ருபண துரஜன
சபல சுக-லப லாகி ரே
3.
ஏ தன யெளவன புத்ர பரிஜன
இதே கி ஆசே பரதீதி ரே
கமல-தல-ஜல ஜீவன டலமல
பஜஹு ஹரி-பத நீதி ரே
4.
ஸ்ரவண கீர்தன ஸ்மரண வந்தன
பாத-ஸேவன தாஸ்ய ரே
பூஜன சகீ-ஜன ஆத்ம-நிவேதன
கோவிந்த-தாஸ- அபிலாஷரே
1.ஓ மனமே, நந்த மகராஜ குமாரனின் தாமரைப் பாதங்களை வணங்கு, அது ஒருவனை அச்சமற்றவனாக மாற்றும், கிடைப்பதற்கரிய இந்த மானுட பிறவியை அடைந்ததால், சாதுக்களின் தொடர்பின் மூலம் இந்த பிறவிக் கடந்துவிடு. கடலை
2. காற்று, மழை, குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றினால் அவதிப்பட்டு, இரவு, பகல் உறக்கமல்லாமல் இருக்கிறேன், சிறிது நிலையற்ற இன்பத்திற்காக மோசமான, போக்கிரிதனம் கொண்ட மனிதர்களுக்கு உபயோகமற்ற சேவையை புரிகிறேன்.
3. குடும்ப அங்கத்தினர்கள், குமாரர்கள், இளமை, செல்வம் போன்றவற்றில் உண்மையான மகிழ்ச்சிக்கு என்ன உத்தரவாதம்? இந்த வாழ்க்கை தாமரை இதழ் மேல் உள்ள ஒரு சொட்டு நீரைப் போல தடுமாற்றமானதாகும். ஆகவே எப்பொழுதும் பகவான் ஹரியின் தாமரைப் பாதங்களுக்கு சேவை செய்து, அதை வணங்கி வர வேண்டும்.
4. கோவிந்ததாஸ் கவிராஜர் ஒன்பது வகையான பக்தித் தொண்டு முறையில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டு, போரானந்தம் அடைகிறார், அதாவது பகவான் ஹரியின் பெருமைகளை கேட்பது, பாடுவது, இடைவிடாமல் நினைத்திருப்பது, பகவான் ஹரியை ஸ்தோத்தரிப்பது, பிரபுவின் தாமரைப் பாதங்களுக்கு சேவை செய்வது, தன்னை ஒரு சேவகனாக எண்ணி பகவானுக்கு தொண்டு புரிவது, புஷ்பம், அகர்பத்தியுடன் அவரை வழிபடுவது, அவருக்கு நண்பனாக சேவை செய்வது மற்றும் முழுவதும் தன்னையே பகவானிடத்தில் அர்ப்பணித்து விடுவது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami.
Comments
Post a Comment