உபாக்யானே உபதேசம்
( அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )
மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
முட்டாள் தேனீயும் , தேனும்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது. தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்த குடுவையை ருசித்துக்கொண்டிருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம் கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக்கொண்டது.
நீதி:
பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு வைஷ்ணவர்கள், பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால் பக்தியின் ஆரம்பத்தை கூட அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்காவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து விட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளின் சுவையை அறிந்திருக்கவில்லை.
ஒரு சில மத வெறி கொண்டவர்களும், தனது மதத்திற்கு துரோகம் செய்பவர்களும் மோசமான எண்ணம் கொண்டவர்களும் பகவானின் விகிரஹங்களையோ அல்லது ஆலயங்களையோ தகர்த்து விடலாம் என்று எண்ணுகின்றனர். வேறு சிலர், "மத போதகர்கள்" என்ற பெயர் கொண்டு ஆணவத்துடன் செயல்பட்டு பகவத் கீதையிலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் தவறுகளை கண்டுபிடிக்கின்றனர்.
ஒரு சிறந்த உதாரணம் என்னவென்றால், ராவணன் தவறான எண்ணத்தோடு சீதாதேவியை கடத்திச்சென்றான். ஆனால் அவனால் சீதாதேவியை நெருங்ககூட முடியவில்லை. ஏனெனில் அவன் கடத்தி வந்தது உண்மையான சீதாதேவி அல்ல. பின்னர் எவ்வாறு அவனது எண்ணம் நிறைவேறும்?
இந்திய நாட்டின் மீது கோபமோ பொறாமையோ கொண்ட ஒருவன், இந்திய வரைபடத்தை கிழித்து போட்டு விட்டு, நான் இந்தியாவை அழித்து விட்டேன் என்று எண்ணுவது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். அதேபோல் பகவான் ஸ்ரீ ஹரிக்கும், அவரது பக்தர்களான தூய வைஷ்ணவர்களுக்கும் எதிராக செயல்படுபவர்கள், பௌதிக அறிவின் மாயையால், முட்டாள்தனமாக செயல்படுபவர்கள்.
ஸ்ரீ சைதன்ய தேவர் கூறுகிறார்:
அப்ரக்ரித வஸ்து நாஹீ ப்ரக்ரித கோசர்
வேதே புராணேதே யே கஹே நிரந்தர்
"ஆன்மீக வஸ்து என்றும் பௌதிக எல்லைக்குள் வருவதில்லை. இது அணைத்து வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது".
(சைதன்ய சரிதாமிருதம் மத்திய லீலை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment