ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 15. 32 முதல் 36
🔆🔆🔆🔆🔆🔆🔆
விஜயா-தஷமீ லங்கா-விஜயேர தினே
வானர-ஸைன்ய கைலா ப்ரபு லஞா பக்த-க ணே
இலங்கையினை வெற்றி கொண்ட விஜயதசமி நாளில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எல்லா பக்தர்களையும் வானர சேனைகளாக வேடமணியச் செய்தார்.
ஹனுமான்-ஆவேஷே ப்ரபு வ்ரி'க்ஷ-ஷாகா லஞா
லங்கா-கஃடேசஃடி பேலே கஃட பாரங்கியா
ஹனுமானின் பரவசத்தை வெளிப்படுத்திய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஒரு பெரிய மரக்கிளையினைக் கையிலெடுத்து, இலங்கையின் கோட்டைச் சுவர்களில் ஏறி, அதனைத் தகர்க்கத் தொடங்கினார்.
'காஹாரே ராவ்ணா' ப்ரபு கஹே க்ரோதா, வேஷே
ஜகன்-மாதா ஹரே பாபீ மாரிமு ஸவம்ஷே
ஹனுமானின் பரவசத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கோபத்துடன் கூறினார், "எங்கே அந்த அயோக்கிய இராவணன்? அவன் அகிலத்தின் அன்னையான சீதையை அபகரித்துள்ளான். தற்போது நான் அவனையும் அவனது வம்சத்தினர் அனைவரையும் கொல்லப் போகிறேன்.''
கோ ஸாஞிர ஆவேஷ தேகி லோகே சமத்கார
ஸர்வ-லோக ஜய ஜய பலே பார பார
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பரவசத்தைக் கண்டு அனைவரும் பெரிதும் வியப்புற்றனர், "ஜய! ஜய!" என்று மீண்டும் மீண்டும் முழங்கத் தொடங்கினர்.
ஏஇ-மத ராஸ ஜாத்ரா, ஆர தீபாவலீ
உத்தான-த்வாதஷீ ஜாத்ரா தேகிலா ஸகலி
இவ்விதமாக, ராஸ யாத்திரை, தீபாவளி, உத்தான துவாதசி என எல்லாத் திருவிழாக்களிலும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் அவரது பக்தர்களும் கலந்து கொண்டனர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment