ஸ்ரீமத் பாகவதத்தில் (6.1.9-10) சுகதேவ கோஸ்வாமியிடம் சில புத்திசாலித்தனமான கேள்விகளை பரீட்சித்து மகாராஜா கேட்டார். இக்கேள்விகளில் ஒன்று “மக்களால் தங்களின் புலன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர்கள் ஏன் பிராயச்சித்தங்களை மேற்கொள்கின்றனர்?” உதாரணமாக, திருடன் ஒருவன் தனது திருட்டுத் தொழிலுக்காக கைது செய்யப்படக் கூடும் என்பதை நன்கறிவான். மேலும் போலீஸ்காரரால் திருடனொருவன் கைது செய்யப்படுவதையும் கூட அவன் காணக்கூடும், இருப்பினும் அவன் தொடர்ந்து திருட்டைச் செய்கிறான். காண்பதாலும், கேட்பதாலும் அனுபவம் திரட்டப்டுகிறது. புத்தியில் தாழ்ந்தவன் காண்பதன் மூலமாக அனுபவத்தை சேகரிக்கிறான். மேலும் அதிக புத்தியுள்ள ஒருவன் கேட்பதன் மூலமாக அனுபவத்தை சேகரிக்கிறான். அறிவுள்ளவன் கற்ற நூல்களில் இருந்தும், சாஸ்திரங்களில் இருந்தும் திருடுவது நல்லதல்ல என்பதையும், திருடனொருவன் அகப்படும் போது தண்டிக்கப்படுவான் என்பதையும் கேள்விப்பட்டதும் திருட்டிலிருந்து பின் வாங்கிக் கொள்கிறான். புத்தியில் தாழ்ந்தவன் திருட்டை நிறுத்தப் பழகிக் கொள்ளும் முன்பாக அவன் முதலில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால் மூடனுக்கு இத்தகைய அனுபவங்கள் இருந்தாலும் தொடர்ந்து அவன் திருட்டைச் செய்கிறான். இத்தகைய மனிதன் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டாலும், சிறையிலிருந்து வெளியேறியதும் மீண்டும் திருடுகிறான். சிறைத் தண்டனை பிராயச்சித்தமாக கருதப்படுமனால் அத்தகைய பிராயச்தசித்தத்தால் என்ன பயன்? இதனால் பரீட்சித்து மகாராஜா வினவினார்:
த்ருஷ்ட - ஸ்ருதாப்யாம் யத் பாபம்
ஜானன் அபி ஆத்மனோ ‘ஹிதம்
கரோதி பூயோ விவச்:
ப்ராயஸ்சித்தம் அதோ கதம்
க்வசின் நிவர்ததே ‘பத்ராத்
க்வசிச் சரதி தத் புன:
ப்ராயஸ்சித்தம் அதோ ‘பார்தம்
மன்யே குஞ்சர –சௌசவத்
பிராயச்சித்தத்தை அவர் யானையொன்று குளிப்பதோடு ஒப்பிட்டார். யானை ஆற்றில் நன்றாக குளிக்கக் கூடும். ஆனால் அது கரைக்கு வந்ததும், உடல் முழுவதிலும் மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறது. ஆகவே அது குளித்ததனால் என்ன பயன்? அதைப் போலவே, பல ஆன்மீகிகள் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜபிக்கின்றனர், ஆனால் அதே சமயம் பல விலக்கத்தக்க விஷயங்களைச் செய்கின்றனர். இக்குற்றங்களை அவர்களது ஜபம் முறித்துவிடும் என்று எண்ணுகின்றனர். இறைவனின் புனித நாம ஜபத்தின் போது ஒருவன் பத்து விதமான குற்றங்களை இழைக்கக்கூடும். இக்குற்றம் ‘நாம்னோ பலாத் யஸ்ய ஹி பாப-புத்தி:’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தின் வலிமையால் பாவங்கள் செய்வது என்பதாகும். அதைப் போலவே சில கிருஸ்துவர்கள் தேவாலயத்திற்குச் சென்று தங்களின் பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். பாதிரியாரின் முன் பாவங்களை ஒப்புப்கொள்வதாலும், சில விரதங்களை மேற்கொள்வதாலும் வாரம் முழுவதும் தாங்கள் செய்த பாவங்களின் விளைவுகளிலிருந்து விடுபடலாம் என்று அவாகள் நினைக்கின்றனர். சனிக்கிழமை முடிந்து ஞாயிறு பிறந்தவுடன் மன்னிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து மீண்டும் தங்களது பாவச் செயல்களை ஆரம்பிக்கின்றனர். இத்தகைய பிராயச்சித்தத்தை, அப்போதே மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவரான பரீட்சித்து மகாராஜா கண்டனம் செய்கிறார். ஒரு பாவச் செயலை ஒரு புண்ணியச் செயலால் முறிக்க முடியாது. நம்முடைய உறங்கும் நிலையிலுள்ள கிருஷ்ண உணர்வை விழிப்புறச் செய்வதே உண்மையான பிராயச்சித்தமாகும்.
உண்மையான அறிவுநிலைக்கு வருவதே சரியான பிராயச்சித்தமாகும். இதற்கான பொதுவான வழிமுறை ஒன்றுள்ளது. ஒழுங்கான சுகாதார முறையை ஒருவன் பின்பற்றும் போது, அவன் நோய்வாய்ப்படுவதில்லை. மனிதன் சில குறிப்பிட்ட கொள்கைகளுக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்பட வேண்டியவனாவனான். இதனால் அவனது சுய அறிவை புதுப்பிக்க முடியும். இத்தகைய முறையான வாழ்வு ‘தபஸ்ய’ அல்லது தவம் என்று கூறப்படுகிறது. உண்மையான அறிவு, அல்லது கிருஷ்ண உணர்வின் தரத்திற்கு ஒருவரை படிப்படியாக உயர்த்திவிட முடியும். தவத்தையும், பிரம்மச்சரியத்தையும் பயில்வதாலும், மனதைக் கட்டுப்படுத்துவதாலும், புலன்கைளக் கட்டுப்படுத்துவதாலும் ஒருவரின் உடைமைகளைத் துறப்பதாலும், சத்தியவிரதத்தை மேற்ககொள்வதாலும், தூய்மையாக இருப்பதாலும் மேலும் யோகாசனங்களைப் பயில்வதாலும் உண்மையான அறிவுநிலையை ஒருவர் அடையலாம். ஆயினும் ஒருவர் அதிர்ஷ்டம் உள்ளவராக இருப்பின், அவர் ஒரு தூய பக்தரின் சகவாசத்தைப் பெற்று, அஷ்டாங்க யோக முறையால் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தையும் சுலபமாகக் கடந்து விடுவார். கிருஷ்ண உணர்வின் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதால் இந்நிலையை அடைய முடியும். கிருஷ்ண உணர்வின் ஒழுக்க விதிகள் பின்வருமாறு:- தவறான உடலுறவு, மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை தவிர்த்தல். மேலும் உண்மையாக ஆன்மீக குருவின் கட்டளையின் கீழ் பரமபுருஷரின் தொண்டில் ஈடுபடுதல். இந்த எளிய முறை ஸ்ரீல ரூப கோஸ்வாமியால் சிபாரிசு செய்யபப்டுகிறது.
(உபதேசாமிருதம் / பதம் 1 / பொருளுரை)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment