யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்
எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்.
பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.
தர்மம் சீர்குலைந்து அதர்மம் தழைத்தோங்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக முழுமுதற் கடவுள் இவ்வுலகில் யுகந்தோறும் அவதரிக்கின்றார் என்பதை நாம் பகவத் கீதையில் (4.7 & 8 காண்கிறோம்.
முழுமுதற் கடவுள் மனித சக்திக்கு மட்டுமின்றி, தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவர் .இராமர் தேவர்களையே அச்சம்கொள்ளச் செய்த இராவணனைக் கொல்வதர்காக , சமுத்திரத்தின் மீது பாலம் கட்டி கடல் கடந்து இலங்கை சென்று இரவணண வதம் செய்தார். இவ்வாறாக,ஸ்ரீ இராமர், சாதுக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த இராவணன் உட்பட பல்வேறு அசுரர்களைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார்.
இந்த நன்னாளில் பக்தர்கள் ஶ்ரீ ராம சந்திர பகவானின் வெற்றியை ஶ்ரீ ராமசந்திர விஜய உற்சவமாக கொண்டாடி வருகிறார்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment