சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை
அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் ச
ஸம்ஷயாத்மா வினஷ்யதி
நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ
ந ஸுகம் ஸம்ஷயாத்மன
மொழிபெயர்ப்பு
ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை.
பொருளுரை
தரமான, அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் பகவத் கீதையே மிகச்சிறந்ததாகும். மிருகங்களைப் போல இருக்கும் மனிதர்களுக்கு சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையோ சாஸ்திர ஞானமோ இல்லை; சிலர், சாஸ்திரங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், அவற்றின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட முடிந்தாலும், அச்சொற்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு சிலர், பகவத் கீதையைப் போன்ற சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்திருந்தாலும், புருஷோத்தமரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டில் நம்பிக்கை கொள்வதில்லை. அத்தகைய நபர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க இயலாது. அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர்களில், நம்பிக்கையின்றி எப்போதும் சந்தேகத்தில் உழல்பவர்கள், எவ்வித முன்னேற்றமும் அடைவதில்லை. கடவுளிடமும் அவரது சொற்களிலும் நம்பிக்கையற்ற மனிதர்கள், இவ்வுலகிலோ மறு உலகிலோ எந்த நன்மையும் அடைவதில்லை. அவர்களுக்கு சுகம் என்பதே இல்லை என்று கூறலாம். எனவே, சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளை நம்பிக்கையுடன் பின்பற்றி, ஞானத்தின் நிலைக்கு உயர்வு பெற வேண்டும். இந்த ஞானம் மட்டுமே ஆன்மீக விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான உன்னத தளத்திற்கு ஒருவனை உயர்த்தக்கூடியது. வேறு விதமாகக் கூறினால், சந்தேகமுடைய நபர்களுக்கு ஆன்மீக விடுதலைக்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே, சீடப் பரம்பரையில் வரும் சிறந்த ஆச்சாரியர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, வெற்றியடைய வேண்டும்.
( பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் நான்கு / பதம் 40 )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment