பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை

 


பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை





படைப்பிற்குப் பிறகு பிறந்த முதல் ஜீவராசியான பிரம்மா, நாராயணரின் நேரிடையான மகனாவார். நாராயணர், கர்போதகசாயி விஷ்ணுவாக ஜடப் பிரபஞ்சத்தினுள் முதன்முதலாகப் பிரவேசித்தார். ஆன்மீக தொடர்பின்றி ஜடத்தினால் படைக்க முடியாது. படைப்பின் முதல் துவக்கத்திலிருந்தே இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பரமாத்மா பிரபஞ்சத்திற்குள் புகுந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து உதயமாகி மலர்ந்த தாமரைப் பூவின் மீது முதல் ஜீவராசியான பிரம்மா பிறந்தார். இதனால் விஷ்ணு பத்மனாபன் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா, தாய் லக்ஷ்மி தேவியின் தொடர்பில்லாமல், தந்யைிடமிருந்து நேரடியாகப் பிறந்தவராவார். இதனால் அவர் “ஆத்ம பூ” எனப்படுகிறார். லக்ஷ்மிதேவி நாராயணருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவரருகிலேயே இருந்தாள். இருப்பினும் லக்ஷ்மி தேவியின் தொடர்பு இல்லாமலேயே நாராயணர் பிரம்மாவைப் பெற்றார். அது பகவானின் சர்வசக்தியாகும். நாராயணர் மற்ற ஜீவராசிகளைப் போன்றவர் என்று முட்டாள்தனமாகக் கருதுபவன் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாராயணர் சாதாரண ஒரு ஜீவராசியல்ல. அவர் சாக்ஷாத் பரம புருஷ பகவானாவார். தெய்வீகமான அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் மற்றெல்லா புலன்களின் ஆற்றல்களுடனும் இயங்கக் கூடியவையாகும். சாதாரண ஜீவராசியொருவன் உடலுறவினால் குழந்தை பெறுகிறான். அவனுக்காக அமைக்கப்பட்டுள்ள இம்முறையைத் தவிர, அவனுக்கு குழந்தை பெறுவதற்கு வேறு வழியில்லை. ஆனால் நாராயணர் சர்வ வல்லமை உடையவர் என்பதால் எந்த சக்திக்கும் அவர் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் அவரது பல்வேறு சக்திகளினால் எதையும் மிகச் சுலபமாகவும், பக்குவமாகவும் செய்யும் சுதந்திரமும், ஆற்றலும் கொண்டவராவார். எனவே பிரம்மா, தாயின் கர்பப்பைக்குள் வைக்கப்படாமல் நேரடியாக தந்தைக்குப் பிறந்த மகனாவார். எனவே அவர் “ஆத்ம பூ” எனப்படுகிறார்.


(பொருளுரை / ஶ்ரீமத் பாகவதம் 1.8.34)

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more