ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம். புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான, ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது. உணவு தானியங்கள், பால், பழம், மரம், கல், சர்க்கரை, பட்டு நூல், இரத்தினங்கள், பருத்தி, உப்பு, நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத் தேவைகள் பூரணமாக பகவானால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரபஞ்சத்திலுள்ள மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், அதிலுள்ள ஒவ்வொரு கிரகத்திலும் வாழும் உயிரினங்களுக்கும், உணவு வழங்குவதற்கும், அவற்றின் நலத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு பகவான் அளித்துள்ளார். தேவைகளைப் பூர்த்தி செய்பவர் பூரணமானவராவார். மேலும் மனிதன் இத்தேவைகளை பெறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டுமே சிறிது தேவைப்படுகிறது. செயற்கையான முறையில் வாழ்வின் வசதிகளை உண்டாக்கும் இயந்திரங்கள், கருவிகள் அல்லது மிகப்பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியவை தேவையில்லை. செயற்கையான தேவைகளினால் வாழ்வைச் சுகமானதாக மாற்றிக் கொள்ளவே முடியாது. ஆனால் எளிய வாழ்வினாலும், உயர்ந்த சிந்தனையாலும் அது சாத்தியமாகும்.
(பொருளுரை / ஸ்ரீமத் பாகவதம் / காண்டம் 2 "பிரபஞ்ச தோற்றம்" / அத்தியாயம் இரண்டு / பதம் 37)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment