ஜன்மைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபிர்
ஏதமான-மத: புமான்
நைவார்ஹதி அபிதாதும் வை
த்வாம் அகிஞ்சன-கோசரம்
மொழிபெயர்ப்பு
எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும், ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது.
பொருளுரை
கௌரவமான குடும்பத்தில் பிறந்து அதிகமான செல்வத்தைப் பெற்றிருத்தல், கல்வி மற்றும் கவர்ச்சியான உடழலகு ஆகியவற்றைப் பெற்றிருத்தல் பௌதிக முன்னேற்றமாக கருதப்படுகின்றன. பௌதிகவாதிகள் அனைவரும் இத்தகைய பௌதிக செல்வங்களைப் பெறுவதில் தீவிரமாக உள்ளனர். இதுவே பௌதிக நாகரிக முன்னேற்றம் எனப்படுகிறது. ஆனால் இச்செல்வங்களை எல்லாம் பெற்றிருப்பதால், நிலையற்ற அவ்வுடைமைகளில் மயங்கி திமிர் பிடித்தவர்களாக நடந்துகொள்கின்றனர். இதன் விளைவாக, இத்தகைய திமிர் பிடித்தவர்களால் பகவானின் புனித நாமத்தை, “ஓ கோவிந்தா, ஓ கிருஷ்ணா” என்று மனப்பூர்வமாக உச்சரிக்க இயலாது. ஒருமுறை பகவானின் புனித நாமத்தை உச்சரிப்பதால், பாவியொருவன், எல்லா பாவங்களையும் போக்கிக் கொள்கின்றான் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதுவே பகவானின் புனித நாமத்தை உச்சரிப்பதின் வலிமையாகும். இது சிறிதும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது. பகவானின் புனித நாமத்திற்கு உண்மையாகவே இத்தகைய சக்தி வாய்ந்த ஆற்றல் உண்டு. ஆனால் இத்தகைய உச்சரிப்பிலும் தரம் என்பது உண்டு. அது உணர்வின் தரத்தைப் பொறுத்ததாகும். ஆதரவற்ற ஒருவரால் பகவானின் புனித நாமத்தை உணர்ச்சி பூர்வமாக உச்சரிக்க முடியும். ஆனால் அதே புனித நாமத்தை, பௌதிகத்தில் பெருந்திருப்தியடைந்தவரால் அவ்வளவு உணர்ச்சி பூர்வமாக உச்சரிக்க இயலாது. பௌதிக திமிர் பிடித்த ஒருவன் பகவானின் புனித நாமத்தை எப்பொழுதாவது உச்சரிக்கக்கூடும். ஆனால் அவனால் தரமாக உச்சரிக்க இயலாது. ஆகவே, பௌதிக முன்னேற்றத்திற்குரிய நான்கு கொள்கைகளான (1) கௌரவமான குடும்பம், (2) நல்ல செல்வம், (3) உயர்ந்த கல்வி மற்றும் (4) கவர்ச்சியான அழகு ஆகியவை ஆன்மீக முன்னேற்றப் பாதையிலுள்ள இடைஞ்சல்கள் என்று கூறப்படுகின்றன. காய்ச்சல், சுகாதாரமற்ற உடலின் ஒருபுற அம்சம் என்பதைப் போலவே, தூய ஆன்மீக ஆத்மாவை மூடியுள்ள பௌதிக திரையும் ஒரு புற அம்சமேயாகும். பொதுவானமுறை என்னவெனில், காய்ச்சலின் அளவைக் குறைத்துவிட வேண்டும், தவறான சிகிச்சை முறையால் அதை அதிகரித்துவிடக் கூடாது. ஆன்மீகத்தில் முன்னேறியவர்கள் சில சமயங்களில் பௌதிக வாழ்வில் ஏழ்மையானவர்களாக இருப்பதாக காணப்படுகிறது. இது உற்சாகத்தை குன்றிவிடச் செய்யாது. மாறாக, காய்ச்சலின் உஷ்ணம் குறைவதானது எப்படி நல்லதோ, அதைப் போலவே இந்த ஏழ்மையான நிலை நல்ல அறிகுறியாகும். வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய அறியாமையில் அதிகமாக ஒருவரை ஆழ்த்திவிடக்கூடிய பௌதிக மார்க்கத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டியதே வாழ்வின் குறிக்கோளாக இருக்கவேண்டும். பௌதிக மயக்கத்தில் ஆழ்ந்துள்ளவர்கள் பகவானின் இராஜ்ஜியத்திற்குள் நுழைய சிறிதும் தகுதியற்றவர்களாவர்.
ஶ்ரீமத் பாகவதம் 1.8.26)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Hare Krishna Prabhu, try to realise this concept.
ReplyDelete