மக்கள் பௌதிக இன்பத்தில் மிகவும் மயங்கியிருக்கும் காரணத்தினால், இது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நமது கிருஷ்ண உணர்வினைப் புதுப்பிப்பதே மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோள் என்றபோதிலும், இவர்கள் பொதுவாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினை விரும்புவதில்லை. கிருஷ்ணரே கடவுள், இதுவே வேத சாஸ்திரங்களின் வாக்கியம்: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். கடவுளைத் தேடிய பின்னர், கடவுள் யார் என்பதில் மாபெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்னர், எல்லா ஆச்சாரியர்களும் கிருஷ்ணரே கடவுள் என்று முடிவு செய்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கலி யுகத்தின் தற்போதைய தருணத்தில், பெரும்பாலான மக்கள் கடவுள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஏன்? இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (7.15) குறிப்பிடப்பட்டுள்ளது:
நமாம் துஷ்க்ருதினோ மூடா:ப்ரபத்யந்தே நராதமா:
மாயயாபஹ்ருத-க்ஞானாஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:
துஷ்க்ருதின என்னும் சொல்லானது “எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவன்” என்று பொருள்படுகிறது. க்ருதி என்றால் “சிறப்புவாய்ந்த” அல்லது “மிகவும் புத்திசாலியான” என்று பொருள். ஆனால் துஷ்க்ருதி என்றால் “தனது தகுதிகளை பாவச் செயல்களுக்காக உபயோகிப்பவன்” என்று பொருள். இத்தகு பாவகரமான மக்கள் ஒருபோதும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. அவர்கள் தங்களுடைய அருமையான புத்தியினை வாழ்வினை பக்குவப்படுத்திக்கொள்வதற்காக உபயோகிக்க இயலும், ஆனால் அவ்வாறு செயல்படுவதற்குப் பதிலாக அவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். புலனுகர்ச்சிக்கான செயல்கள் பாவச் செயல்கள் ஆகும். ஒருவன் எப்போது புலனுகர்ச்சிக்கு அடிமையாகின்றானோ, அப்போது அவன் பாவகரமான முறையில் செயல்பட்டே ஆகவேண்டும்.
இந்த அடிமைத்தனத்தின் அறிகுறிகள் இந்த யுகத்தில் தெள்ளத்தெளிவாக எங்கும் காணப்படுகிறது. ஒவ்வொருவரும் புலனுகர்ச்சிக்காக கடினமாக உழைக்கின்றனர். புலனுகர்ச்சியின் வாழ்வினை ஏற்ற மாத்திரத்தில், நீங்கள் பாவச் செயல்களைச் செய்வது உறுதி.
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், மொரிஷியஸ் -1975)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment