சூரியனில் இருள் என்னும் கேள்விக்கு இடமில்லாததைப் போலவே, ஆன்மீக உலகிலும் இருள் அல்லது அறியாமை என்னும் கேள்விக்கு இடமே இல்லை. அங்குள்ள அனைவரும் அனைத்து பொருள்களும் ஸுத்த-ஸத்வ நிலையில், தூய்மையான ஸத்வ குணத்தில் இருக்கின்றன(ர்). சாதாரண ஸத்வம் அல்ல, ஸுத்த-ஸத்வம். இந்த பௌதிக உலகில் முக்குணங்கள் உள்ளன–ஸத்வம், ரஜோ, தமோ. இவற்றில் எந்த குணமும் தூய்மையானதல்ல: ஒன்று மற்றொன்றோடு கலந்துள்ளது. அந்த கலவையினால் பல தரப்பட்ட உயிரினங்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் ஸுத்த-ஸத்வ, தூய்மையான ஸத்வத்தின் தளத்திற்கு வர வேண்டும். இதற்கான மிகச்சிறந்த வழி, அதிகாரபூர்வமான மூலத்திலிருந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாகும். இதனை ஸ்ரீமத் பாகவதம் (1.2.17) பின்வருமாறு விளக்குகின்றது:
ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண
புண்ய-ஷ்ரவண-கீர்தன:
ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி
விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம்
“அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை முறையாகக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தரக்கூடியதாகும். அச்செய்தி களைக் கேட்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள பக்தனின் இதயத்திலிருந்து ஜட இன்பங்களுக்கான ஆசைகளை அவரே அகற்றிவிடுகிறார்.” ஆகையால், “கிருஷ்ணரிடத்தில் அன்பை வளர்ப்பதில் மட்டுமே நான் இப்பிறவியில் பெருமுயற்சி செய்வேன்,” என்று நினைத்து, கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதிலும் அவரது புகழைப் பாடுவதிலும் நீங்கள் தீவிரமாக இருந்தால், அது சாத்தியமாகும். மேலும், நீங்கள் கிருஷ்ணரிடத்தில் முழுமையான அன்பை வளர்த்துக் கொண்ட உடனேயே பௌதிக உடலில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பின்றி போய்விடும்.
விருந்தாவனம் -இந்தியா, அக்டோபர் -28, 1976
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment