மனத்தை வெல்வதில் நாம் தோல்வியுற்றால், சாம்ராஜ்யங்களை வென்றாலும் தோற்றவர்களேயாவோம்.

 



கிருஷ்ண புலி ஸேய் ஜீவ-அனாதி-பஹிர் முக

அதயேவ மாயா தாரே தேய ஸம்ஸார-துக்க”


“கிருஷ்ணரை மறந்துவிட்டு காலங்காலமாக மனிதன் பிரபுவின் புற அம்சத்தினால் வசீகரிக்கப்பட்டு வந்துள்ளான். ஆகையால் பொய்த் தோற்றமான மாயை அவனது ஜடவாழ்வில் எல்லாவிதமான துயரங்களையும் தந்துள்ளது.” மனிதன் தன் அமைப்பில் ஆத்மாவாவான்; உன்னதமான பிரபுவின் அம்சமாவான். மனம் மாசடைந்தும், மனிதன் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறு சுதந்திரம் காரணமாகப் புரட்சி செய்கிறான். இந்த நிலையில் அவன் மனம் “நான் ஏன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்? நானே கடவுள்” என்று அவனுக்குச் சொல்லித் தருகிறது. இவ்வாறாக, தவறான கருத்தில் செயல்பட்டு அவன் வாழ்வு பாழ்படுகிறது. நாம் சாம்ராஜ்யங்கள் உட்பட எதையெதையோ வெற்றி காண முயற்சிக்கிறோம். ஆனால் நம் மனத்தை வெல்வதில் நாம் தோல்வியுற்றால், சாம்ராஜ்யங்களை வென்றாலும் தோற்றவர்களேயாவோம். சக்ரவர்த்திகள் ஆனாலும் நம்முள் நம் மாபெரும் எதிரி இருப்பான். அவன் நம் சொந்த மனம்.


ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:

சீதோஷ்ணஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ:


“மனதை வென்றவனுக்கு அவன் நிலைபெற்றுவிடுவதால், பரமாத்மா ஏற்கனவே அடையப்பட்டுவிடுகிறார். அத்தகைய மனிதனுக்கு இன்ப துன்பமும், குளிர் வெப்பமும், மான அவமானமும், எல்லாம் சமமே” (பகவத் கீதை 6.7)


உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் பரமாத்மாவாக எழுந்தருளியிருக்கும் புருஷோத்தமனான முழுமுதற் கடவுளின் கட்டளைப்படி நடக்க கடமைப்பட்டவன். அவனின் மனம் மாயையால் தவறான வழியில் இட்டுச் செல்லப்படும்போது, அவன் ஜடச் செயல்களில் சிக்கிக்கொள்கிறான். எனவே யோக முறைகளில் ஒன்றால் மனம் கட்டுப்படுத்தப்படும்போது அவன் தன் இலக்கை அடைந்துவிட்டதாகக் கருதப்பட வேண்டும். மேலான கட்டளைக்கு ஒருவன் கீழ்ப்படிய வேண்டும். மனம் உயர்வான இயற்கையில் நிலைபெற்றிருக்கும்போது உன்னதமான பரம்பொருளின் கட்டளைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. மனம் ஏதாவதொரு உயர்வான கட்டளையை ஒப்புக்கொண்டு நடக்க வேண்டும். மனம் கட்டுப்பாட்டிற்கு உள்ளிருக்கும்போது ஒருவன் தானாகவே உயராத்மாவான பரமாத்மாவின் கட்டளையை மேற்கொண்டு செயல்படுகிறான். இப்பரமான நிலையைக் கிருஷ்ண உணர்வில் இருப்பவன் உடனடியாகப் பெற்றுவிடுவதால் பிரபுவின் பக்தன் ஜட வாழ்வின் இரட்டைத் தன்மையால் - துயரம், மகிழ்ச்சி - குளிர், வெப்பம் போன்றவற்றால், பாதிக்கபடுவதில்லை. இந்நிலை சமாதி, அதாவது பரம்பொருளில் லயித்திருத்தல் எனப்படும்.



( பக்குவநிலைக்கான வழி / அத்தியாயம் 3 )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more