உண்மையாக ஆன்மீக உணர்வில் நிலைபெறும் பொழுது நம்முடைய குணங்களில் அல்லது அறிகுறிகளில் மாற்றங்கள் தோன்றும். அந்த
அறிகுறிகள் யாவை? ஒருவன் தன்னுடைய ஆன்மீக உணர்வில் நிலை
பெற்றுவிட்ட பிறகு, அவனுக்கென்று ஆசையோ,
வருத்தமோ இருக்காது. வருத்தம் என்பது இழப்பிற்காக, ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக.
இரண்டு விதமான வியாதிகள் இந்த பௌதிக உலகை
விவரிக்கிறது: நம்மிடம் எது இல்லையோ அதற்காக நாம் ஆசைப்படுவது, “எனக்கு இந்தப் பொருட்கள் கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன். என்னிடம் பணம்
இல்லை, அதனால் எனக்கு ஒரு
பத்து லட்ச ரூபாய் கிடைத்தால், எனக்கு இன்பமாக இருக்கும்”. நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எப்படியோ அது தொலைந்துவிட்டது. அப்பொழுது, “அய்யய்யோ பணத்தை தொலைத்துவிட்டேனே” என்று அழுகிறோம். நாம் பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்படுவது என்பது ஒரு
விதமான துன்பம். அதே போல்
தான் இழப்பிற்காக வருத்தப்படுவதும் ஒருவிதமான துன்பம். ஆனால் நாம்
பிரம்ம பூத நிலையில் இருக்கும் பொழுதோ ஆசைப்படுவதோ அல்லது கவலைப்படுவதோ இல்லை. நாம்
ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும் சமமாக காண்போம். நாம் தீவிரமான குழப்பத்தின் நடுவில் இருந்தாலும் அதனால் நாம் கவலைப்பட மாட்டோம். இதுவே சத்வ குணமாகும்.
கிருஷ்ணஇன்பத்தின் இருப்பிடம் / அத்தியாயம் 1
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment