மொழிபெயர்ப்பு
ஒரு பக்தர்
பரம புருஷ
பகவானை வழிபட்டு செயல் விளைவுகளின் மயக்கத்திலிருந்து தன்னை
விடுவித்துக் கொள்ளும் பொருட்டு தமது
செயல்களின் பயனை
அர்ப்பணிக்கும் பொழுது, அவரது பக்தி
ஸத்வ குணத்தில் இருக்கும்.
பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் இவர்களுடன் பிரம்மச்சாரிகள், கிருஹஸ்தர்கள், வானப்பிரஸ்தர்கள் மற்றும்
சந்நியாசிகள் அனைவரும் வர்ணங்கள் மற்றும்
ஆஸ்ரமங்களின் எட்டுப்
பிரிவுகளின் உறுப்பினர்கள் ஆவர்.
பரம புருஷ
பகவானைத் திருப்தி செய்வதற்காக அவர்களுக்கென்று நிறைவேற்றுவதற்கென விதிக்கப்பட்ட கடமைகள்
உண்டு. அச்செயல்கள் நிகழ்த்தப்பட்டு, முடிவுகள் பகவானிடம் அர்ப்பணிக்கப்படும் பொழுது, அவை கர்மார்ப்பணம் என அழைக்கப்படுகின்றன, அதாவது பகவானைத் திருப்தி செய்வதற்காக நிகழ்த்தப்படும் கடமைகள்
என்று பொருள். ஏதேனும் மயக்கம்
அல்லது முந்தைய
தவறு இருந்தால், இந்த அர்ப்பணிக்கும் முறையால் அத்தவறு ஈடுசெய்யப்படுகின்றது. ஆனால்
இந்த அர்ப்பணிக்கும் முறை
தூய பக்திக்கு மாறாக ஸத்வ
குணத்தில் இருந்தால், அதன் விளைவுகள் வேறுபட்டனவாகும். நான்கு ஆஸ்ரமங்களும் நான்கு வர்ணங்களும் தங்களின் தனிப்பட்ட ஆசைகளுக்கு ஏற்றபடி
சில பயன்
கருதிச் செயல்படுகின்றன. அதனால்
அச்செயல்கள் ஸத்வ
குணத்தில் அமைந்துள்ளன; அவை தூய பக்தியின் வகையில் சேர்க்கப்பட இயலாதவை. ரூப கோஸ்வாமியால் வர்ணிக்கப்பட்டதுபோல தூய பக்தித் தொண்டு
எல்லா உலக ஆசைகளிலிருந்தும் விடுபட்டது. அந்யாபிலாஷிதா சூன்யம்
சுயநலம் அல்லது
உலகியல் ஆசைக்கான எந்த மன்னிப்பும் கிடையாது. பக்திச் செயல்கள் பயன் தரும்
செயல்களுக்கும் பயிற்சிக்கு உட்பட்ட தத்துவ
ஊகத்திற்கும் அப்பாற்பட்டவையாக இருக்க
வேண்டும். தூய பக்தித் தொண்டு
எல்லா உலகியல்
குணங்களுக்கும் அப்பாற்பட்டது.
தாமஸ, ரஜோ, ஸத்வ
குணங்களில் உள்ள
பக்தித் தொண்டு
எண்பத்தொன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கேட்டல், உச்சரித்தல், நினைவுகூர்தல், வழிபடுதல், வேண்டுதலை அர்ப்பணித்தல், தொண்டு
புரிதல் மற்றும்
எல்லாவற்றையும் அர்ப்பணமாகக் கொடுத்தல் என்று
வேறுபட்ட பக்திச்
செயல்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் மூன்று தரமான
வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கேட்டல்
என்பது ரஜோ குணத்தில், தாமஸ குணத்தில் மற்றும்
ஸத்வ குணத்தில் உள்ளது. அதுபோல, உச்சரித்தல் என்பது தாமஸ,
ராஜோ மற்றும்
ஸத்வ குணம்
முதலியவற்றில் உள்ளது. மூன்று ஒன்பதால் பெருக்கப்பட்ட இருபத்தேழு ஆகிறது. மீண்டும் மூன்றால் பெருக்கப்படும்பொழுது அது எண்பத்தொன்று ஆகிறது. அடுத்த ஸ்லோகங்களில் விளக்கப்படுவதுபோல, தூய பக்தித் தொண்டின் தரத்தை அடையும்
பொருட்டு ஒருவர்
எல்லாம் கலந்த
அடிப்படை பக்தித்
தொண்டைக் கடக்க
வேண்டும்.
ஶ்ரீமத் பாகவதம் 3.29.10
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment