மாறுபட்ட சிந்தனையாளரால் கோவிலில், உலக இன்பம், புகழ், பொருள் இவற்றுக்கான நோக்கங்களுடன் செய்யப்படும் தெய்வ வழிபாடு
ரஜோ குணத்தில் செலுத்தப்படும் பக்தியாகும்.
பொருளுரை
மாறுபட்ட சிந்தனையாளர் எனும் சொல்
கவனமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். இந்தத்
தொடர்பில் உள்ள
வடமொழிச் சொற்கள்
பிந்ந—த்ருக் மற்றும்
ப்ருதக்—பாவ: ஆகும். மாறுபட்டவர் என்பவர்
தன் ஆசையை
பகவானின் ஆசையிலிருந்து பிரித்தும் வேறுபடுத்தியும் பார்ப்பவர் ஆவார். கலப்பட பக்தர்கள் அல்லது ரஜோ மற்றும் தமோ குணத்தில் உள்ள
பக்தர்கள், பகவானின் ஆசை பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதலாகும் என்று
நினைக்கின்றனர். அம்மாதிரி பக்தர்களின் ஆசை அவர்களின் புலன் நுகர்ச்சிக்காக பகவானிடமிருந்து எவ்வளவு
முடியுமோ அவ்வளவு
பெறுவதாகும். இதுவே மாறுபட்டவனின் மனப்பாங்கு ஆகும். உண்மையில் முந்தைய
அத்தியாயத்தில் தூய பக்தி விளக்கப்பட்டுள்ளது. பகவானின் மனமும் பக்தரின் மனமும் சரியாகப் பொருந்த வேண்டும் என்று பக்தர்
எதையும் விரும்பக் கூடாது. ஆனால் பரமனின் ஆசையை
நிறைவேற்ற வேண்டும். அதுவே ஒருமையாகும். பக்தரின் ஆர்வம் அல்லது
ஆசை, பகவானின் ஆசையிலிருந்து வேறுபடும் பொழுது, அவரின் மனப்பாங்கு பிரிவுனையாளருக்கானது. பக்தர் என்று
அழைக்கப்படுபவர் பூவுலக
இன்பத்திற்கு ஆசைப்படும் பொழுது, பகவானுடைய ஆர்வத்தின் குறிப்பின்றி அல்லது
பகவானின் அருளை
அல்லது கருணையைப் பயன்படுத்திக் கொள்வதால் புகழ் அல்லது
செல்வம் பெற விரும்பினால், அவர் ரஜோ குணத்தில் உள்ளவர் ஆவார்.
ஆயினும், மாயாவாதிகள் “மாறுபட்டவர்” எனும்
சொல்லை வேறு
விதத்தில் விளக்குகின்றனர். பகவானை
வழிபடும் பொழுது, ஒருவர் தன்னை
பகவானுடன் ஒன்றாக
நினைக்க வேண்டும் என்று அவர்கள்
கூறுகின்றனர். இது உலக இயற்கையின் குணங்களுக்குள் உள்ள
மற்றொரு பக்தியின் சீர்குலைந்த வடிவமாகும். உயிரினம் பரமனுடன் ஒன்றி
இருப்பது என்பது
உண்மையில் ஒருமையின் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பகவானின் சார்பாக
செயல்படுவதையன்றி, ஒரு தூய பக்தருக்கும் தனிப்பட்ட ஆசை இல்லை. ஒருவருக்கு ஒரு துளியாவது சுயநல
ஆர்வம் இருந்தால், அவரது பக்தி
உலக இயற்கையின் மூன்று குணங்களுடன் கலந்தது ஆகும்.
ஶ்ரீமத் பாகவதம் 3.29.9
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment