ஸ்ரீல ஸனாதன கோஸ்வாமியால் எழுதப்பட்ட ஹரி பக்தி விலாஸாவில் (ஹபவி) துளசி மாலை அணிவதால் உண்டாகும் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில .
கருட புராணத்தின்படி,
துளசி மாலை அணிபவர்களிடம் எப்போதும் ஸ்ரீ ஹரி இருக்கிறார் (ஹபவி 4.3353)
எம ராஜன் அவர்களை நெருங்குவதில்லை (ஹபவி 4.3375)
கெட்ட கனவுகள், விபத்துகள், ஆயுத தாக்குதல் மற்றும் யமதூதர்களிடமிருந்து, துளசி மாலை பாதுகாப்பு அளிக்கிறது (ஹபவி 4 .338).
யார் வேண்டுமானாலும் துளசி மாலை அணியலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது. பத்ம புராணத்தின்படி, சுத்தமான நிலை அல்லது அசுத்தமான நிலை ஆகிய எந்த நிலையிலிருந்தாலும், ஒருவர் துளசி மாலையை எப்போதும் அணிந்திருக்கவேண்டும்.
விஷ்ணு தாமோதரத்தில், கிருஷ்ணர் சொல்லுகிறார், "துளசி மாலையை அணிந்திருக்கும் ஒருவர், சுத்தமில்லாமல் தவறான பழக்கங்களையுடையவராக இருந்தாலும், அவர் எந்த சந்தேகமுமில்லாமல் கண்டிப்பாக என்னை வந்தடைகிறார்" (ஹபவி 4. 322). இதன் பொருள், *துளசி பரிசுத்தமானதாகையால். அதனை பக்தியுடன் அணிபவர்களை பரிசுத்தப்படுத்துகிறது.*
யார் வேண்டுமானாலும் துளசி மாலை அணியலாம் என்றாலும், துளசி மாலை அணிபவர்கள் மது அருந்துவது , மாமிசம் உண்பது மற்றும் திருமணத்திற்கு வெளியிலான தவறான உறவை வைத்திருப்பது ஆகியவைகளை நிறுத்துவது அறிவுறுத்தப்படுகிறது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment