மொழிபெயர்ப்பு
உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன்
என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை.
எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச்
சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச்
சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக்
கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான்.
பொருளுரை
இச்சுலோகத்தில், அசிந்த்ய-பேதாபேத தத்துவம்,
அதாவது, “ஒரேசமயத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்ட தத்துவம்” விவரிக்கப்படுகிறது.
ஜீவராசி பரமபுருஷரைப்போல் நித்தியமானவன் (நித்ய). ஆனால் வேறுபாடு என்னவெனில், பரமபுருஷர்
அனைவரிலும் பெரியவராவார். அவருக்குச் சமமானவரோ, அவரைவிட உயர்ந்தவரோ ஒருவருமில்லை. ஆனால்
ஜீவராசியோ, மிகமிகச் சிறியவனாவான் (சூக்ஷ்ம). ஜீவராசியின் பரிமாணம், தலைமுடியின் நுனியின்
பத்தாயிரத்தில் ஒரு பாகம் என்று சாஸ்திரம் விவரிக்கிறது. பரமபுருஷர் எங்கும் நிறைந்திருக்கிறார்
(அண்டாந்தரஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம்). அதற்கேற்ப ஜீவராசி மிகமிகச் சிறியவன் என்று ஏற்றுக்
கொள்ளப்படுவானாயின், இயல்பாகவே மிகமிகப் பெரியவரைப் பற்றிய விசாரணை எழவேண்டும். மிகமிகப்
பெரியவர் பரமபுருஷராவார். மிகமிகச் சிறியவன் ஜீவராசியாவான்.
“அர்ஜுனா, பரமபுருஷர் ஒவ்வொருவரின் இதயத்திலும்
இருக்கிறார். பௌதிக சக்தியால் செய்யப்பட்ட இயந்திரங்களில் அமர்ந்திருப்பவர்கள் போன்ற
ஜீவராசிகளின் பயணங்களை அவரே வழி நடத்துகிறார்”. ஜீவராசி இவ்வுலகைத் தன் விருப்பம்போல்
அனுபவிக்க பகவான் வாய்ப்பளிக்கிறார். ஆனால் ஜீவராசி எல்லா பௌதிக ஆசைகளையும் விட்டுவிட்டு,
பரமபுருஷரிடம் முழுமையாகச் சரணடைந்து, பரமபதம் அடையவேண்டும் என்ற தமது விருப்பத்தை
பகவான் வெளிப்படையாகக் கூறுகிறார்.
ஜீவராசி மிகமிகச் சிறியவனாவான் (ஸூக்ஷ்ம). இது
தொடர்பாக ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி பின்வருமாறு கூறுகிறார்: பௌதிக விஞ்ஞானிகளுக்கு உடலுக்குள்
உள்ள ஜீவராசியைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினமாகும். இருப்பினும் உடலுக்குள் ஜீவராசி
இருப்பது பற்றி வேத வல்லுணர்களிடமிருந்து நாம் அறிகிறோம். உடல் ஜீவராசியிலிருந்து வேறுபட்டதாகும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment