(பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள்)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண விஞ்ஞானம் குறித்த புத்தகங்களை எழுதும்படி தனது சீடர்களுக்கு உபதேசித்தார். அப்பணியினை அவரது சீடத் தொடரில் வருபவர்கள் இன்று வரை ஏற்று நடத்தி வருகின்றனர். இடைவிடாத சீடப் பரம்பரையின் காரணத்தினால், பகவான் சைதன்யரால் வழங்கப்பட்ட தத்துவங்களின் விளக்கங்களும் வியாக்கியானங்களும் மிகமிக அதிகமாகவும், உண்மையிலிருந்து பிறழாமலும் கட்டுக்கோப்புடையதாகவும் உள்ளன. பகவான் சைதன்யர் அவரது இளமைக் காலத்தில் பண்டிதர் என்று பிரபலமாக அறியப்பட்டிருப்பினும், அவர் சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு ஸ்லோகங்களை மட்டுமே விட்டுச் சென்றார். இந்த எட்டு ஸ்லோகங்கள் அவரது திருப்பணியையும் கொள்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந்த உயர்மதிப்புடைய பிரார்த்தனைகளை இன்று வழங்குவதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறோம்.
(1)
சேதோ-தர்பண-மார்ஜனம்
பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபனம்
ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம்
வித்யா-வதூ-ஜீவனம்
ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம்
பூர்ணாம்ருதாஸ்வாதனம்
ஸர்வாத்ம-ஸ்னபனம் பரம் விஜயதே
ஶ்ரீ-கிருஷ்ண-ஸங்கீர்தனம்
எல்லாப் புகழும் ஶ்ரீ கிருஷ்ண நாம சங்கீர்த்தனத்திற்கே. ஏனெனில், இது காலங்காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள எல்லா அழுக்குகளையும் சுத்தப்படுத்தி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு, இறப்பு என்னும் தீயை அணைக்கிறது. நிலவு தன் குளிர்ந்த ஒளியினால் எல்லோருக்கும் நன்மையளிப்பதைப் போல, இந்த சங்கீர்த்தன இயக்கம் மனித குலத்திற்கு மாபெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு உயிரூட்டுகிறது. பேராணந்தப் பெருங்கடலை பெருகச் செய்கின்றது. எப்பொழுதும் நாம் விரும்பும் அமிர்தத்தை முழுமையாக சுவைக்கச் செய்கின்றது.
(2)
நாம்நாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ்
தத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால:
ஏதாத்ருஷீ தவ க்ருபா பகவன் மமாபி
துர்தைவம் ஈத்ருஷம் இஹாஜனி நானூராக:
எம்பெருமானே, உமது திருநாமம் மட்டுமே அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியதாகும். இதனால் உமக்கு கிருஷ்ண, கோவிந்த என ஆயிரக்கணக்கான நாமங்கள் உள்ளன. இத்தகு தெய்வீக நாமங்களில் உம்முடைய தெய்வீக சக்திகள் அனைத்தையும் நிரப்பியுள்ளீர். இந்த நாமங்களை ஜெபிப்பதற்கு கடினமான நிபந்தனைகள் ஏதும் இல்லை. உமது திருநாமங்களால் உம்மை அணுகுதல் சுலபம். ஆனால் இத்தகைய நாமங்களில் ருசியற்ற நான் மிகவும் துர்பாக்கியசாலியாக இருக்கிறேன்.
(3)
த்ருணாத் அபி ஸுனீசேன
தரோர் அபி ஸஹிஷ்ணுனா
அமானினா மானதேன
கீர்தனீய: ஸதா ஹரி:
பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் ஒருவர் மிகவும் பணிவான மனநிலையில் இருக்க வேண்டும். தெருவில் உள்ள புல்லைவிடப் பணிவாகவும், மரத்தை விட பொறுமையாகவும், தனக்கென்று எந்த மரியாதையையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு எல்லா மரியாதையையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இத்தகு மனோபாவத்தில் ஒருவர் ஹரியின் திருநாமத்தை இடைவிடாமல் கீர்த்தனம் செய்ய முடியும்.
(4)
ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம்
கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே
மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே
பவதாத் பக்திர் அஹைதுகீ த்வயி
எல்லாம் வல்ல பெருமானே, பொருள் வேண்டேன், என்னைப் பின்பற்றுவோரும் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்; யான் வேண்டுவதெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் உமக்குக் களங்கமற்ற பக்தித் தொண்டாற்ற வேண்டும் என்பது மட்டுமே.
(5)
அயி நந்த-தனுஜ கிங்கரம்
பதிதம் மாம் விஷமே பவாம்புதௌ
க்ருபஜா தவ பாத-பங்கஜ-
ஸ்தித-தூலீ-ஸத்ருஷம் விசிந்தய
நந்த மகாராஜாவின் புதல்வரே, யான் உமது நிரந்தர சேவகன். இருப்பினும் எவ்வாறோ பிறப்பு இறப்பின் கடலில் வீழ்ந்துவிட்டேன். தயவுசெய்து இந்த மரணக் கடலிலிருந்து என்னை கைத்தூக்கி உமது தாமரைத் திருவடிகளில் ஒரு தூசியாக வைத்துக் கொள்வீராக.
(6)
நயனம் கலத்-அஷ்ரு-தாரயா
வதனம் கத்கத-ருத்தயா கிரா
புலகைர் நிசிதம் வபு: கதா
தவ-நாம-க்ரஹணே பவிஷ்யதி
எம்பெருமானே, உமது திருநாமத்தை உச்சரிக்கும்போது, எனது கண்கள் ஆனந்தக் கண்ணீரால் அலங்கரிக்கப்படுவது எப்போது? நா தழுதழுப்பது எப்போது? உடலெங்கும் மயிர்சிலிர்ப்பது எப்போது?
(7)
யுகாயிதம் நிமேஷேண
சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்
ஷூன்யாயிதம் ஜகத் ஸர்வம்
கோவிந்த-விரஹேண மே
ஓ கோவிந்தா! உம்முடைய பிரிவு ஒரு க்ஷணம் என்றாலும் அதனை நான் யுகங்களாக உணர்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகி மழை போல் பொழிகிறது. தாங்களின்றி இந்த உலகத்தையே நான் சூன்யமாகக் கருதுகிறேன்.
8)
ஆஷ்லிஷ்ய வா பாத-ரதாம் பினஷ்டு மாம்
அதர்ஷனாம் மர்ம-ஹதாம் கரோது வா
யதா ததா வா விததாது லம்படே
மத்-ப்ராண-நாதஸ் து ஸ ஏவ நாபர:
கிருஷ்ணர் என்னை முரட்டுத்தனமாக அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாது என் இதயத்தை நோகச் செய்தாலும், அவரே என் பிரபுவாவார். அவரைத் தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்துகொள்ள அவருக்கு பூரண சுதந்திரம் உண்டு. இருப்பினும் அவரே எனது வணக்கத்திற்குரிய இறைவனாவார், இதில் எந்த நிபந்தனையும் இல்லை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment