சிறுவனின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்ட குருவாயூரப்பன்


கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர்.


முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது கோவிலில் பூஜைகள தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.


அவனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து , கண்ணா, சாப்பிடு” என்று கூறினான் கண்ணன் அசையவில்லை உடனே அவன் வெறும் சாதத்தை - எவ்வாறு கண்ணன் சாப்பிடுவார் என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான் தயிரை சாதத்தில் கலக்கி. உப்புமாங்காயை வைத்தான் அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான் சாதம் அப்படியே இருந்தது.


என்னுடைய அப்பா வந்தால் உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார். சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான் குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான் குழந்தையும் ஸந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான் பொதுவாக நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம் காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. "பிரசாதம் எங்கே?” என்று கேட்டார். குழந்தையும், கண்ணன் முழுவதும்  சாப்பிட்டுவிட்டார்" என்று சொன்னான்.சிறிது நேரத்தில் குழந்தையின் தந்தை நம்பூதிரியும் அங்கே வந்தார், பிஷாரடி நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு. கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான் என்று சொன்னார் நம்பூதிரி, "நைவேத்தியத்தை என்ன செய்தாய்? என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, கண்ணன் நேரிலேயே வந்து முழுவதும் சாப்பிட்டுவிட்டார்" என்று சொன்னான் அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தயிரும் மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், "தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல் கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா? " என்று அடித்தார். குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை குழந்தையை அடிப்பதைக் குருவாயூரப்பனுக்கு பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கத கையை ஓங்கியபோது "நான் தான் உண்டேன் குழந்தை குற்றமற்றவன் என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.


நம்பூதிரி கண்களில் நீர் வழிய "என் மகனுக்குக் காட்சி தந்து அவன் தந்த உணவையும் உண்டாயோ என்னே உன் கருணை என் மகன் பாகயசாலி' என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more