மொழிபெயர்ப்பு
பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது. இது, தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும்.
பொருளுரை
பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி, பொருத்தமான ஒரு
நேரத்தில் ஜடவுடலை விட்டு, அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர். பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது: தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட
தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால், அக்னி
தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில், சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது,
அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து, ஆன்மீக வானத்தை அடைகின்றனர். இந்த
நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற
நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது. பக்குவமடைந்த யோகிகள் இந்த
நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். விரும்பிய நேரத்தில் உடலைவிடும் மனப்பக்குவத்தை அடைவதே யோகத்தின் பூரணத்துவமாகும். யோகிகளால், வாகனங்களின் உதவியில்லாமலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள் எந்த கிரகத்திற்கும் சென்றுவிட முடியும். மிக
உயர்ந்த கிரக அமைப்பிற்குக் கூட
யோகிகளால் மிகக் குறுகிய நேரத்தில் சென்று விடமுடியும். பௌதிகவாதிகளுக்கு இது சாத்தியமல்ல. மிகவுயர்ந்த கிரகத்திற்குச் செல்ல ஒருவேளை அவர்கள் முயன்றால், மணிக்கு லட்சக்கணக்கான மைல்கள் வேகத்தில் சென்றாலும், அது அவர்களுக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும். இது வேறுபட்ட ஒரு
விஞ்ஞானமாகும். இதை பயன்படுத்திக் கொள்ளும் கலையை பீஷ்மதேவர் நன்கு
அறிந்திருந்தார். ஜடவுடலை உகுப்பதற்குப் பொருத்தமான நேரத்திற்காக அவர் காத்திருந்தார். அவரது பேரன்களான பாண்டவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்த வேளையில் பொன்னான அந்த நேரமும் வந்தது. இவ்வாறாக பரம
புருஷரான ஸ்ரீ கிருஷ்ணர், புண்ணிய புருஷர்களாகிய பாண்டவர்கள் மற்றும் பகவான் வியாசரை தலைமையாகக் கொண்ட மாமுனிவர்கள் முதலான எல்லா மகாத்மாக்களின் முன்னிலையிலும் உயிரை விட அவர்
தயாரானார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment