வயம்து ஸாக்ஷாத் பகவன் பவஸ்ய
ப்ரியஸ்ய ஸக்யு: க்ஷண-ஸங்கமேன
ஸூதுஸ் சிகித்ஸ்யஸ்ய பவஸ்ய ம்ருத்யோர்
பிஷக்தமமம் த்வாத்ய கதிம் கதா: ஸ்ம
மொழிபெயர்ப்பு
உமக்கு மிகவும் பிரியமானவரும், உமது நெருங்கிய நண்பராகவும் இருக்கும் சிவபெருமானுடன் ஒரு கணநேரம் தொடர்பு கொண்டதால் உம்மைக்காணும் பேறு பெற்றோம். வாழ்க்கையென்னும் தீராத நோயைக் கூடத் தீர்க்கும் தேர்ந்த மருத்துவர் நீர். எங்களது நல்வினைப்பயனால் உமது திருவடித்தாமரைகளைச் சரண்புக எங்களால் முடிந்தது.
பொருளுரை
“ஹரிம் வினா ஸ்ருதிம் தரந்தி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. முழுமுதற்கடவுளின் திருவடித் தாமரைகளைச் சரணடையாது. பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு போன்றவற்றை மீண்டும் மீண்டும் அளிக்கும் மாயையின் பிடியிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது. பிரசேதார்கள், சிவபெருமானின் கருணையினாலேயே முழுமுதற்கடவுளைச் சரணடைந்தனர். சிவபெருமான் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் பரமபக்தன் ஆவார். “வைஷ்ணவானாம் யதா ஸம்பு:” சிவபெருமானே மிகச் சிறந்த வைணவராவர். அவரது உண்மையான பக்தர்கள் அவரது அறிவுரையினைப் பின்பற்றி பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளைச் சரணடைகின்றனர். உலகத்துச் செல்வங்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் சிவபெருமானின் பக்தக்ரள் எனப்படுவோர் சிவபிரானால் ஏமாற்றப்படுகின்றனர். உண்மையில் சிவன் அவர்களை ஏமாற்றவில்லை. ஏனெனில் மக்களை ஏமாற்றும் தொழில் சிவனுக்கு ஏற்றதல்ல. ஆனால் அவரது பக்தர்கள் தாம் ஏமாற்றப்படவேண்டுமென்று விரும்புகின்றனர். மிக எளிதில் மகிழ்ச்சியடையும் சிவபெருமான் இப்பக்தர்களுக்கு எல்லாவகையான வரங்களையும் அளித்து விடுகிறார். இவ்வரங்கள் மறைமுகமாக அப்பக்தர்களை அழிக்கவே பயன்படுகின்றனர். சான்றாக இராவணன் சிவபெருமானிடமிருந்து வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டான். ஆயினும் இறுதியில் அவனும் அவன் குலமும், அரசும் அழிந்தது. ஏனென்றால் அவன் சிவபெருமானின் வரங்களைத் தவறாகப் பயன்படுத்தினான் அவன் தனது அதிகாரத்தினால் வீண்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்தான். நாமச்சந்திர மூர்த்தியின் மனைவியையே சிறையெடுத்தான். எனவே அவன் அழிக்கப்பட்டான். சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுவது ஒன்றும் கடினமல்ல. உண்மையில் இவையெல்லாம் வரங்கள் அல்ல. பிரசேதார்களும் சிவபெருமானிடமிருந்து வரம் பெற்றனர். அதன் துணைகொண்டு அவர்கள் பகவான் விஷ்ணுவின் திருவடித்தாமரைகளைச் சரணடைந்தனர். இதுவே உண்மையான வரமாகும். கோபியர்களும் பிருந்தாவனத்தில் சிவபெருமானை வழிபடுகின்றனர். “கோபீஸ்வரனாக” அங்கே சிவபெருமான் இருக்கின்றார். கோபியர்கள் சிவபெருமானிடம் தங்கள் கணவனாக பகவான் கிருஷ்ணரே வரவேண்டுமென்று வரமருள வேண்டுகின்றனர். ஒருவனது குறிக்கோள் வீடுபேறு பெற்று, முழுமுதற்கடவுளை அடைவதற்கானதாக இருக்கும் பொழுது அவன் தேவர்களை வழிபடுவதில் குற்றம் ஒன்றுமில்லை. பொதுவாக மக்கள் பௌதீக நன்மைக்காகவே தேவர்களை வழிபடுகின்றனர். இதனை பகவத்கீதையும் (7.30) குறிப்பிடுகின்றது.
காமைஸ் தைஸ் னதர் ஹ்ருத-ஜ்ஞானா:
ப்ரபத்யந்தே (அ)ன்ய-தேவதா:
தம் தம் நியமம் ஆஸ்தாய
ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
“மண்ணுலக இச்சைகளினால் கவரப்பட்டோர் தேவர்களைச் சரணடைந்து தங்கள் இயற்கைக்கேற்ப ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி அவர்களை வழிபடுகின்றனர். உலகியல் நன்மையினால் கவரப்பட்டவன் ஹ்ருத-ஜ்ஞான” (தனது புத்தியை இழந்தவன்) என்று அழைக்கப்படுகிறான். இது தொடர்பாக சாத்திரங்களில் சில இடங்களில் சிவபெருமான் முழுமுதற்கடவுளிடமிருந்து வேறானவர் அல்லர் என்று கூறப்படுவதைக் குறித்துக் கொள்ளவேண்டும். இதன் பொருள் சிவபெருமானும் பகவான் விஷ்ணுவும் கருத்து வேறுபாடின்றி நெருக்கமாக இருக்கின்றனர் என்பதாகும். உண்மை என்னவெனில் “ஏகலே ஈஸ்வர க்ருஷ்ண ஆர ஸப ப்ருத்ய” அதாவது “ஒரே எஜமானர் கிருஷ்ணரேயாவார் மற்றவர்கள் எல்லோரும் அவரது பக்தர்கள் மற்றும் தொண்டர்களாவர்” (சை.ச.அதி 5.142) இதுவே உண்மையாகும். இவ்விஷயத்தில் சிவபெருமானுக்கும் பகவான் விஷ்ணுவிற்கும் இடையே எந்தவதிமான கருத்து வேறுபாடும் கிடையாது. சாத்திரங்களில் எந்த இடத்திலும் சிவபெருமான் பகவான் விஷ்ணுவுக்கு இணையானவர் என்று குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் சிவபெருமானும், பகவான் விஷ்ணுவும் ஒன்று எனச் சொல்லும் சிவபெருமானின் பக்தர்களால் கிளப்பிவிடப்பட்டவையாகும். “வைஷ்ணவ-தத்ரத்தில்” இது கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது. “யஸ் து நாராயணம் தேவம்” என்று பகவான் விஷ்ணுவும், சிவபெருமானும், பிரம்ம தேவனும் எஜமானன் பணியாள் என்ற ரீதியில் நெருங்கிய தொடர்புடையவர்களாவர். “ஸிவ - விரிஞ்சி நுதம்.” சிவபெருமானாலும், பிரம்மதேவனாலும் வணங்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர் பகவான் விஷ்ணு ஆவார். இவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று கருதுவது பெருங்குற்றமாகும். இவர்கள் அனைவரும் சமம் என்று சொல்வது பகவான் விஷ்ணு முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அனைவரும் அவரது தொண்டர்கள் என்ற உணர்வில்தான்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment