சில சமயம் நம் முன் வினா எழுப்பப்படும், “நீங்கள் எங்களைப் புலால் உண்ணக் கூடாது என்று கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் காய்களை உண்கிறீர்கள். இது வன்முறை இல்லை என்று நினைக்கிறீர்களா?” பதில் என்னவென்றால், காய்களை உண்பதும் வன்முறையே, சைவ உணவு உண்பவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிராக வன்முறை புரிகின்றார்கள். ஏனெனில், காய்களுக்கும் உயிர் உண்டு. பக்தரல்லாதார், பசுக்கள், ஆடுகள் மற்றும் பல பிற விலங்குகளயைும் உண்ணும் பொருட்டு கொல்கின்றனர். சைவ உணவு உண்பவராக இருக்கும் பக்தரும் தாவர உயிர்களை கொல்கிறார். ஆனால் இங்கு ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினத்தைக் கொல்வதன் மூலம் வாழவேண்டி உள்ளது என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது; இதுவே இயற்கையின் நியதி ஆகும். ‘ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் ஒரு ஜீவராசி மற்றொரு ஜீவராசிக்கு உணவாகும்.” (பாகவதம் 1.13.47) ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு உணவாகும் வகையில் இந்த ஜட உலகை பகவான் படைத்துள்ளார் ஆனால் ஒரு மனிதன் வன்முறையை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே செயல் புரிய வேண்டும்.
ஒரு மனித உயிர் பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படாத எதையும் உண்ணக் கூடாது. யக்ஞா ஸிஷ்டாஸுன: ஸந்த: ஒருவர் பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் எல்லாப் பாவமான எதிர்ச் செயல்களிலிருந்தும் அவர் உடனேஸவிடுபடுகிறார். அதனால் ஒரு பக்தர் பிரஸாதம் அல்லது பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுப் பொருள் மட்டுமே உண்கிறார். ஒரு பக்தர் பக்தியுடன் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவை பகவானுக்கு நைவேத்தியம் அளிக்கும்போது, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அதை உண்பதாகக் கூறுகிறார். ஒரு பக்தர் கிருஷ்ணருக்குக் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அர்ப்பணிக்க வேண்டும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை விரும்பினால், பக்தர் அதையும் பகவானுக்கு அளிக்க முடியும். ஆனால் பகவானோ அதை செய்ய பக்தர்களுக்கு ஆணையிடவில்லை.
நாம் வன்முறை புரிய வேண்டும், அதுவே இயற்கையின் நியதி. ஆயினும், நாம் வன்முறையை வரம்பு மீறிச் செய்யக் கூடாது. ஆனால் பகவானால் ஆணையிடப்படும் அளவுதான் செய்ய வேண்டும். அர்ஜுனர் கொல்லும் கலையில் ஈடுபட்டால் கொல்லுதல், உண்மையில் வன்முறை ஆயினும், அவர் கிருஷ்ணரின் கட்டளையின்பேரில் எதிரியைக் கொன்றார். அதே வழியில், நாம் தேவையான அளவு பகவானின் ஆணையால் வன்முறை புரிந்தால் அது நாதிஹிம்ஸா எனப்படுகிறது. நாம் வன்முறையைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் நாம் வன்முறை புரியவேண்டிய கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வில் தள்ளப்படுகிறோம். ஆனால் நாம் தேவையான அளவைவிடவோ அல்லது பரம புருஷ பகவானால் கட்டளை இடப்பட்டதைவிடவோ அதிக அளவில் வன்முறை புரியக் கூடாது.
( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 3.29.15 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment