ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள
வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி
வங்காள கவிஞரும் ஸ்வரூப தாமோதரரும்
ஒருமுறை ஒரு வங்காள கவிஞர் பகவான் ஜகந்நாதரையும் பகவான் சைதன்யரையும் ஒப்பிட்டு நாடகம் ஒன்றை இயற்றியிருந்தார். அனைத்து பக்தர்களும் அதனைப் பாராட்டினர், மஹாபிரபுவும் அதனைக் கேட்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் ஸ்வரூப தாமோதரரால் சோதிக்கப்படாமல் எதையும் கெளராங்கரிடம் காட்டக் கூடாது என்ற சட்டம் அங்கே வழக்கத்தில் இருந்தது; ஏனெனில், தூய பக்தித் தொண்டின் கொள்கையிலிருந்து துளியளவு விலகினாலும் கெளராங்கர் அதனை விரும்ப மாட்டார்.
வங்காள கவிஞருடைய நாடகத்தின் அறிமுக வரிகளைக் கேட்ட மாத்திரத்தில், அதிலிருந்த தவறான தத்துவக் கருத்துக்களை ஸ்வரூப தாமோதரர் கண்டுபிடித்தார். தூய கிருஷ்ண பக்தரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும்படியும் சைதன்ய மஹாபிரபுவிடம் முழுமையாக சரணடையும்படியும் ஸ்வரூப தாமோதரர் அவருக்கு அறிவுறுத்தினார்; அதன் மூலமாக அவர் மஹாபிரபுவின் கருணையைப் பெற்று கிருஷ்ண உணர்வின் தத்துவத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள இயலும். அப்போது மட்டுமே கிருஷ்ண உணர்வின் இலக்கியங்களை எழுதுவதற்கான தகுதியைப் பெற முடியும்.
மஹாபிரபுவின் அற்புதமான கீர்த்தனங்கள்
கெளர ஹரியின் அடியார்கள் அனைவரும் ஜகந்நாதரின் பிரசாதத்தை விரும்பும் அளவிற்குப் பெற்றுக்கொள்ள மன்னர் பிரதாபருத்ரர் ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வோர் இரவும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வது வழக்கம். அனைவரும் களைப்புற்ற பின்னர், பக்தர்கள் மிகவும் தாராளமாக பிரசாதத்தை விநியோகிப்பர். இவ்வாறாக, அவர்கள் அனைவரும் பாடி, ஆடி, பிரசாதம் ஏற்று, மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் ஆனந்தமாக இருந்தனர்.
ஓர் அதிகாலையில் ஜகந்நாதரை தரிசித்த பின்னர், பகவான் சைதன்யரும் அவருடன் இருந்த பக்தர்களும் கீர்த்தனத்தைத் தொடங்கினர். மஹாபிரபு உயரமாக குதிக்க ஆரம்பித்தார். அவரது பற்கள் தளர்ந்தன, உடல் நடுங்கியது; உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. கீர்த்தனம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது, கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதில் அவர்கள் முற்றிலுமாக மூழ்கினர். மனம், உடல், இல்லம் என எல்லாவற்றையும் மறந்து, கிருஷ்ணரின் நாமங்களை மட்டுமே அவர்கள் அனுபவித்தனர்
கோவிந்தரின் உயரிய சேவை
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
ஒவ்வொரு நாளும் மஹாபிரபு பிரசாதம் ஏற்ற பின்னர், கோவிந்தர் அவரது உடலை சில நிமிடங்களுக்குப் பிடித்துவிடுவதும், கெளராங்கர் உறங்கிய பின்னர் மீதமிருக்கும் அவரது மஹா பிரசாதத்தை ஏற்பதும் வழக்கமாக இருந்தது. ஆனால் நீண்ட நேர கீர்த்தனம் நடைபெற்ற அந்நாளில், கெளர ஹரி தமது அறைக்குத் திரும்பி வந்தபோது, முழுமையாகக் களைப்படைந்திருந்ததால், வாயிலிலேயே படுத்துவிட்டார். சற்று நகர்ந்தால் உள்ளே சென்று உடம்பைப் பிடித்துவிட இயலும் என்று கோவிந்தர் கூறியபோது, “நகரக்கூட இயலாத நிலையில் நான் களைப்பாக உள்ளேன். நீ விரும்புவதைச் செய்வாயாக,” என்று மஹாபிரபு பதிலளித்தார்.
எனவே, தனது மேல்துணியை எம்பெருமானின் உடலில் சார்த்திய கோவிந்தர், அவரை நமஸ்கரித்து, தாண்டிச் சென்று, உடம்பை பிடித்துவிடத் தொடங்கினார். ஓய்விலிருந்து எழுந்த கெளராங்கர், கோவிந்தர் தமது அருகிலேயே அப்போதும் அமர்ந்திருந்ததைக் கண்டபோது, சற்று கோபத்துடன், “ஏன் இன்னும் பிரசாதம் ஏற்கவில்லை?” என்று வினவினார். எம்பெருமானின் உடலைத் தாண்டிச் செல்ல தான் விரும்பவில்லை என்று கோவிந்தர் பதிலளித்தார். “அப்படியெனில், உள்ளே எவ்வாறு வந்தீர்கள்?” என மஹாபிரபு விசாரிக்க கோவிந்தர் பதிலளிக்கவில்லை. “எனது எஜமானரின் சேவைக்காக, குற்றமிழைத்து நரகத்திற்குச் செல்லலாம். ஆனால் எனது சொந்த புலனுகர்ச்சிக்காக குற்றத்தின் சிறிய சாயலைக்கூட என்னால் கற்பனை செய்ய முடியாது,” என்று கோவிந்தர் தமது மனதில் எண்ணினார்.
நாளை . .
ஹரிதாஸ தாகூரின் மறைவு
தொடரும் . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment