குண்டிசா கோயிலைத் தூய்மை செய்தல்

 


ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்


வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி



குண்டிசா கோயிலைத் தூய்மை செய்தல்



வருடந்தோறும் ரத யாத்திரைக்கு முந்தைய நாளன்று, பகவான் ஜகந்நாதரின் வருகையை முன்னிட்டு, சைதன்ய மஹாபிரபுவும் அவரது சகாக்களும் இணைந்து குண்டிசா கோயிலை சுத்தம் செய்வர். அவர்கள் நூற்றுக்கணக்கான துடைப்பங்களையும் நீர்ப்பானைகளையும் எடுத்து, கோயிலையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் முழுமையாக இரண்டு முறை கூட்டி, நீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதயத்தினுள் தோன்றுவதற்கான அழைப்பை கிருஷ்ணர் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, இதயத்திலுள்ள அனைத்து அசுத்தங்களையும் ஒரு பக்தன் கண்டிப்பாகக் களைய வேண்டும் என்பதை இந்த லீலையின் மூலமாக ஸ்ரீ சைதன்யர் செய்து காட்டினார்.





ரத யாத்திரையில் நடனம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ரத யாத்திரை நாளன்று, கோயிலிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட பகவான் ஜகந்நாதர், தமது ரதத்தில் அமர்த்தப்பட்டார். நாட்டின் மாமன்னராக இருந்தபோதிலும், பிரதாபருத்ரர் தம்மை பகவான் ஜகந்நாதரின் சாதாரண சேவகனாகக் கருதினார். அதனால், அவர் ரத யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, தங்கத் துடைப்பத்தைக் கொண்டு வீதியைப் பெருக்கினார். அவரது அந்த அடக்கமான செயல் பகவான் சைதன்யரைக் கவர்ந்தது.

ஊர்வலத்தில் ஏழு ஸங்கீர்த்தனக் குழுக்கள் கலந்து கொண்டன. பகவான் ஜகந்நாதரின் மலர்ந்த முகத்தை கௌராங்கர் உற்று நோக்கியபோது, ஏழு குழுக்களிலும் அவர் ஒரே நேரத்தில் குதித்து ஆட ஆரம்பித்தார். பெரும்பாலான பக்தர்கள் மஹாபிரபு தங்களது குழுவில் மட்டுமே இருந்ததாக எண்ணினர். ஆனால் மிகவும் நம்பகமான அடியார்களால், மஹாபிரபு தம்மை ஏழு ரூபங்களில் வியாபித்துக் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பொன்னிற மலையைப் போன்ற கௌராங்கர் காற்றில் தாவிக் குதித்தபோது, பூமியே கவிழ்ந்துவிடும் போலத் தோன்றியது.

அதனைத் தொடர்ந்து, பகவான் சைதன்யர் பல்வேறு சாஸ்திர பிரார்த்தனைகளை ஜகந்நாதருக்கு அர்ப்பணம் செய்தார். பௌதிக காதல் கவிதையைப் போன்று தோன்றிய பாடல் ஒன்றையும் பாடினார், அதன் பொருளை ஸ்வரூப தாமோதரரால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும், பிற்காலத்தில் ஸ்ரீல ரூப கோஸ்வாமியாலும் அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடிந்தது. விருந்தாவனத்தை விட்டுச் சென்ற கிருஷ்ணரை பல வருடத்திற்குப் பின்னர், ஸ்ரீமதி ராதாராணியும் விருந்தாவனவாசிகளும் குருக்ஷேத்திரத்தில் சந்தித்தபொழுது, ஸ்ரீமதி ராதாராணியிடம் என்ன மனோபாவம் இருந்ததோ அந்த மனோபாவத்தை மஹாபிரபு ஏற்றிருந்தார். கிருஷ்ணரை பகவான் ஜகந்நாதரின் வடிவில் துவாரகையிலிருந்து (ஜகந்நாதர் கோயிலிலிருந்து) மீண்டும் விருந்தாவனத்திற்கு (குண்டிசா கோயிலுக்குக்) கொண்டு செல்லும் உணர்ச்சிகளுடன் மஹாபிரபு ரத யாத்திரையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

ஜகந்நாதரின் ரதத்திற்கு முன்பு நடனமாடிய பகவான் சில சமயங்களில் விரைவாக நகர்ந்தார், அப்போது ஜகந்நாதரும் விரைவாக அவரைப் பின்தொடர்ந்து செல்வார். மஹாபிரபு மெதுவாக நகர்ந்தபொழுது ஜகந்நாதரும் மெதுவாக நகர்ந்தார்.



சைதன்ய மஹாபிரபு மன்னர் பிரதாபருத்ருக்கு கருணை வழங்குதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பாதையின் பாதி வழியில் ஜகந்நாதரின் தேரை சிறிது நேரம் நிறுத்துவது வழக்கம். அப்போது, நடனத்தினால் களைப்புற்றிருந்த மஹாபிரபு ஓய்வெடுப்பதற்காக ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார். ஸார்வபௌம பட்டாசாரியரால் முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டபடி, மன்னர் பிரதாபருத்ரர் எளிமையான உடையுடன் எந்த ஆபரணமும் இன்றி அடக்கமான வைஷ்ணவரைப் போன்ற தோற்றத்துடன் அத்தோட்டத்தினுள் நுழைந்தார். அங்கிருந்த எல்லா பக்தர்களின் அனுமதியைப் பெற்று, பகவான் சைதன்யரின் கால்களையும் பாதங்களையும் பிடித்துவிட ஆரம்பித்தார். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து நேர்த்தியான கோபி கீதத்தை அவர் பாடத் தொடங்கினார்.

தவகதாம்ரும் என்று தொடங்கும் கோபி கீதத்தின் ஒன்பதாவது பாடலைக் கேட்ட மாத்திரத்தில், கௌராங்கர் பேரானந்தத்தினால் எழுந்து, தாங்கள் எனக்கு விலைமதிப்பற்ற இரத்தினங்களை வழங்கியுள்ளீர். ஆனால் தங்களுக்குத் திருப்பித் தர என்னிடம் எதுவும் இல்லாததால், நான் தங்களை அரவணைத்துக்கொள்கிறேன்,” என்று கூறி அவரைக் கட்டித் தழுவினார். பின்னர் பக்திப் பரவசத்துடன் மீண்டும்மீண்டும் அவர் அதே ஸ்லோகத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். மீண்டும் மன்னரை அரவணைத்து தனது கருணையை அவர்மீது முழுமையாகப் பொழிந்தார். அனைத்தையும் அறிந்தவராக இருந்தபோதிலும், தம்முடன் உரையாடியவர் மாறுவேடத்திலுள்ள மாமன்னர் என்பதை அறியாததுபோல் பகவான் நடந்து கொண்டார்.

ரதம் குண்டிசா செல்லுதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஜகந்நாதர் மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்ற பின்னர், திடீரென்று ரதம் நின்றுவிட்டது. நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்களது முழு வலிமையைக் கொண்டு வடத்தை பலமாக இழுத்தனர், ஆனால் தேரோ சிறிதும் நகரவில்லை; மாபெரும் பலசாலிகள் அழைத்து வரப்பட்டனர், யானைகள் கதறுமளவிற்குத் தூண்டப்பட்டன, ஆனால் பயனில்லை. என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. தமக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பை பக்தர்களுக்கு நல்குவதற்காகவே ஜகந்நாதர் தேரில் வருவதற்கு சம்மதிக்கின்றார், ஆனால் அவர் தமது சொந்த விருப்பத்தில் நகர்கின்றார்ஶீஇதுவே உண்மை. சிறிது நேரம் கழித்து, தேரின் பின்னே சென்ற கௌராங்கர் தமது தலையினால் அதனைத் தள்ளினார். தேர் மெதுவாக மீண்டும் முன்னோக்கி உருள ஆரம்பித்தது, ஜகந்நாதரும் தமது உலாவைத் தொடர்ந்தார். பலமடங்கு பேரொலி பெற்ற கீர்த்தனம், குண்டிசா கோயில் வரை தொடர்ந்தது, ஜகந்நாதர் கீழிறக்கப்பட்டார்.

பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்தல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


வங்காளத்திலிருந்து வந்த பக்தர்கள் அனைவரும் மழைக்காலத்தின் நான்கு மாதங்கள் முழுவதும் புரியிலேயே தங்கினர். பகவான் சைதன்யரின் இனிய சங்கத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவர்கள், பகவான் ஜகந்நாதரின் திருப்திக்காக பல்வேறு விழாக்களை கொண்டாடினர். நான்கு மாதம் முடிந்த பின்னர், கௌராங்கர் அவர்களை வங்காளத்திற்குத் திரும்பும்படி வேண்டினார். ஜாதி, இனம் என்று பாராமல், வங்காளத்திலுள்ள அனைவருக்கும் கிருஷ்ண பிரேமையை வழங்குமாறு அவர் நித்யானந்தரையும் அத்வைதரையும் குறிப்பாகக் கேட்டுக் கொண்டார். மஹாபிரபுவின் சங்கத்தினை விட்டுவிலக பக்தர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் கிளம்புவதற்குத் தங்களை தயார்படுத்தியபோதிலும், அவர்களால் கிளம்ப இயலவில்லை. இறுதியில், தத்தமது கடமைகளைப் பேணுவதற்காகத் திரும்பிச் செல்லும்படி அவர்கள் அனைவரையும் பகவான் சைதன்யர் வலியுறுத்தினார்.

மேலும், நான் புரியில் தங்கியிருந்தாலும், ஒரே நேரத்தில் வங்காளத்திலும் இருக்கின்றேன். குறிப்பாக, ஸ்ரீவாஸ பண்டிதரின் இல்லத்தில் கீர்த்தனம் நடைபெறும்போதும், நித்யானந்தர் ஆனந்தமாக நடனமாடும்போதும், நான் உங்களுடனேயே இருக்கின்றேன். எனது தாயின் தாமரை பாதங்களைக் காண்பதற்காக தினமும் நான் நவத்வீபத்திற்குச் செல்கின்றேன்,” என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.


நாளை . .


ரூப ஸநாதனரின் சரணாகதி


தொடரும் . . . 


( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more