பந்தப்பட்ட ஆத்மா நான்கு வழிகளில் குறைபாடுடையவனாக இருக்கிறான். அவை அவன் மாயை வசப்பட்டவன், தவறு செய்பவன், குறை அறிவு உடையவன், ஏமாற்றம் எண்ணம் உடையவன் என்பவையாகும். பௌதீக பந்தத்திலிருந்து ஒருவன் விடுதலை பெறாதவரையில் இந்நான்கு குற்றங்களும் கண்டிப்பாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் ஏமாற்றும் எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் தொழில் மற்றும் பண வரவு செலவுகளில் நடை முறைப்படுத்தப்படுகிறது. இரண்டு நண்பர்கள் இணைந்து அமைதியுடன் வாழ்ந்தபோதிலும் அவர்களிடையே வரவு செலவு என்று வரும்பொழுது, அவர்களிடம் இருக்கும் ஏமாற்றும் மனப்பான்மையின் காரணமாக அவர்கள் பகைவர்களாகின்றனர். ஒரு தத்துவவாதி ஒரு பொருளாதார நிபுணனை ஏமாற்றுக்காரன் என்று குற்றம் சொல்கிறான், ஒரு பொருளாதார நிபுணனோ, ஒரு தத்துவவாதி பணத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது அவனும் ஏமாற்றுக்காரனாகிறான் என்று தத்துவவாதியைக் குற்றம் சொல்கிறான். எது எப்படியிருந்த போதிலும் பௌதீக வாழ்க்கையின் நிலை இதுவேயாகும். மிகப் பெரிய தத்துவத்தை ஒருவன் கற்றுக் கொடுக்கலாம் ஆனால் அவனுக்குப் பணம் தேவைப்படும்பொழுது அவன் ஏமாற்றுக்காரானாகிறான். இப்பௌதிக உலகில் விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும், பொருளுாதார நிபுணர்களும் ஒர் வழி அல்லது மற்றோர் வழியில் ஏமாற்றுக்காரர்களேயாவர். விஞ்ஞானிகள் ஏமாற்றுப் பேர்வழிகள்ஆவர் ஏனென்றால் விஞ்ஞானத்தின் பெயரில் அவர்கள் ஏராளமான போலியான விஷயங்களை எடுத்து வைக்கின்றனர். இவர்கள் சந்திரனுக்குப் போவதாகக் கூறுவார்கள். ஆனால் இறுதியில் தங்கள் சோதனைகளுக்காகப் பொதுமக்களின் ஏராளமானப் பணத்தினைக் கொண்டு தங்கள் ஏமாற்று வேலையை முடித்துக் கொள்கின்றனர். அவர்களால் பயனுடைய அவர்களால் பயனுடைய ஒன்றைக் கூடச் செய்ய முடியாது. இந்நான்கு குற்றங்களையும் தாண்டி மேலே இருக்கும் ஒருவனைக் காணும் வரை ஒருவன் மற்றொருவனின் அறிவுரையினை ஏற்றுக் கொண்டு பௌதீகப் பந்தத்திற்குப் பலியாகிவிடக் கூடாது. கிருஷ்ணர் அல்லது அவரது உண்மையானப் பிரதிநிதியிடமிருந்து அறிவுரை மற்றும் உபதேசங்களைப் பெறுவதே மிகச்சிறந்த முறையாகும். இதன்மூலம் ஒருவன் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் கூட மகிழ்ச்சியுடனிருக்கலாம்.
( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 5.14.26 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment