சத்தியபாமா, துவாரகையிலுள்ள
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கிய ராணிகளுள் ஒருத்தி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றபின், அவருடைய அரண்மனையைக் காண சத்தியபாமாவுடன் சென்றார். சக்தியபாமாவுடன் அவர் இந்திரலோகத்திற்கும் சென்றார். அங்கு சசிதேவி அவளை வரவேற்று தேவர்களின் தாயான அதிதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சக்தியபாமாவிடம் மிகவும் திருப்தியடைந்த அதிதி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் இருக்கும்வரை மாறாத இளமையோடு இருக்கும் வரத்தை அவளுக்கு அளித்தாள். பிறகு ஸ்வர்கலோகங்களில் உள்ள, தேவர்களுக்கே உரிய தனிப்பட்ட உரிமைகளைக் காட்டுவதற்காக அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். சத்தியபாமா பாரிஜாத மலரைக் கண்டதும், அச்செடியை துவாரகையிலுள்ள தன் அரண்மனையில் வைத்து அலங்கரிக்க விரும்பினாள். பிறகு துவாரகைக்குத்
திரும்பியதும், பாரிஜாத மலரைப் பற்றிய தமது விருப்பத்தை கணவனிடம் தெரிவித்தாள். சத்தியபாமாவின் அரண்மனை முக்கியமாக அரிய நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு
இருந்தது. இதனால் மிகவும் உஷ்ணமான கோடைக் காலத்திலும் கூட அரண்மனையின் உட்புறம் குளிர் சாதனம் பொருத்தியதுபோல்
குளுமையாகவே இருந்தது. அவளது அரண்மனையை அவள் பல்வேறு கொடிகளால் அலங்கரித்தாள்.
அது, எல்லாவகையிலும்
உயர்ந்தவரான அவளது கணவர் அங்கிருப்பதையே
பறை சாற்றியது. ஒருமுறை தன் கணவருடன் திரௌபதியைச் சந்தித்த அவள், கணவரை திருப்திப்படுத்தும்
வழிமுறைகளில் திரௌபதியிடமிருந்து
அறிவுரைகளைப் பெற ஆவல்கொண்டாள். இந்த விஷயத்தில் திரௌபதி கைதேர்ந்தவளாக இருந்தாள். ஏனெனில் அவளுக்கு பஞ்ச பாண்டவர்கள் கணவன்களாக இருந்தனர். அவர்கள் ஐவரும் அவளிடம் மிகவும் திருப்தி அடைந்திருந்தனர்.
திரௌபதியிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றபின், அவளுக்கு நல்லாசிகளை வழங்கி விட்டு சத்தியபாமா துவாரகைக்குத் திரும்பினாள். அவள் சத்ராஜித்தின்
புதல்வியாவாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவுக்குப்பின், அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றபோது சத்தியபாமாவும், ருக்மணியும் உட்பட எல்லா ராணிகளும் உணர்ச்சிவசத்துடன்
பகவானை எண்ணி மனங்கலங்கினர். அவளது வாழ்வின் இறுதி கட்டத்தில், கடுந்தவத்தை மேற்கொள்ள அவள் காட்டுக்கு சென்றாள்.
சத்தியபமா ஸ்வர்க லோகங்களிலிருந்து பாரிஜாத மலரை பெற்று வரும்படி தன் கணவரைத் தூண்டினாள். பகவானும், மனைவியை திருப்திப்படுத்த கேட்ட பொருளைக் கொண்டுவரும் ஒரு சாதாரண கணவனைப் போல், பலாத்காரமாக தேவர்களிடமிருந்து
அதைப் பெற்றுத் தந்தார். ஏற்கனவே விளக்கியதைப் போல், பல மனைவிகளை மணந்து கொண்டு, அவர்களது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் பகவானுக்கு இல்லை. ஆனால் பகவானுக்கு எல்லா சௌகரியங்களையும் செய்து தருவதெனும் மிகச்சிறந்த பக்தித் தொண்டை ராணிகள் ஏற்றுக் கொண்டதால், பகவானும் ஒரு பூரணமான, உண்மையான கணவரைப் போலவே நடந்து கொண்டார். எந்த மண்ணுலகவாசியும் ஸ்வர்க லோகங்களிலிருந்து எதையும் பெற கற்பனையும் செய்து பார்க்க முடியாது. அவை, குறிப்பாக பாரிஜாத மலர்கள், தேவர்களின் உபயோகத்திற்காகவே உள்ளவையாகும். ஆனால் அவர்கள் பகவானின் விசுவாசமுள்ள மனைவிகளாக இருப்பதால், ஸ்வர்கவாசிகளுடைய மனைவிகளின் தனிப்பட்ட உரிமைகளையும் அவர்கள் அனைவராலும் அனுபவிக்க முடிந்தது. அதாவது, பகவானுடைய சிருஷ்டியிலுள்ள அனைத்திற்கும்
அவரே உரிமையாளர் என்பதால், பிரபஞ்சத்தின்
எப்பகுதியிலிருந்தும், எந்த அபூர்வமான பொருளையும் துவாரகையின் ராணிகள் பெறுவதில் பெரும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.14.37 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment