புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள்
முன்னொரு காலத்தில் புண்ணிய ஸ்தலமான காஞ்சியில் ஒரு பிரபலமான பட்டுப்படவை வியாபாரி (ஸாதிகா வியாபாரி) ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் கூண்டுடன் கூடிய கிளியோன்று (பஞ்சரம்) விற்பனைக்ககாக வைத்திருப்பதைக் கண்டார். அது மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமானதாகவும் விளங்கியது. வியாபாரி அதனை மிகவும் மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வாங்கி வந்தார். கிளியைக் கூண்டுடன் தனது வீட்டு வாசலின் முன்பு கட்டி தொங்க விட்டார். வீட்டிலுள்ள அனைவரும், வியாபாரியின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் கிளியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கிளி அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. அது, "கடந்த முறை ஒரு வியாபாரி என்னைப் பிடித்தபோது மிகவும் சிரமப்பட்டுத்தான் தப்பித்தேன். இந்த முறை தப்பிக்க மிகவும் புத்திசாலித்தனமான யோசனையைக் கையாள வேண்டும்" என்று நினைத்துக் கொண்டிருந்தது. பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர் இந்த கிளிக்கு இனிமையான வார்த்தைகளைப் பேச மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருந்தார்.
மறுநாள் தனது காலைக் கடன்களையெல்லாம் முடித்த பின் அந்த வியாபாரி கிளியை பார்ப்பதற்காக வந்தார். உடனே கிளி அவனிடம், " ஓ வர்த்தக ஸ்ரேஷ்டரே, இந்த கூண்டிலிருந்து என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு மூன்று சத்திய வார்த்தைகளை சொல்கிறேன்" என்றது. கிளியின் இனிய வார்த்தைகளில் ஆச்சரியப்பட்டுப் போன வியாபாரி, இத்தகைய அபூர்வமான கிளியை நான் ஏன் விடுவிக்கப் போகிறேன்" என்று நினைத்தான். உடனே கிளி , "தாஸஜன ரஞ்சகா! மஹானுபாவ!, இந்த வார்த்தைகளால் வியாபாரியைப் போற்றிப் புகழ்ந்தது. வியாபாரி கிளியின் இந்த வார்த்தைகளால் சற்றே குழம்பிப்போனான். பின் கிளி தொடர்ந்து, "உனக்கு எனது முதல் சத்ய வார்த்தைப் பிடித்திருந்தால் என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். மேலும் எனது இரண்டாவது சத்ய வார்த்தைகள் பிடித்திருந்தால் என்னை பெரிதாக வளர்ந்த தென்னை மரத்தில் விட்டு விடுங்கள். எனது மூன்றாவது சத்ய வார்த்தைகளும் பிடித்திருந்தால் நீங்கள் விரும்பினால் என்னை விடுவித்து விடுங்கள்" என்றது.
கிளியின் இந்த இனிமையான மற்றும் புத்திசாலித்தனமான வார்த்தைகளால் வியப்படைந்த வியாபாரி கிளியிடம், சரி உனது முதல் சத்ய வார்த்தையைக் கூறு" என்றார்.
கிளி கூறியது, "நாம் எதை இழந்தாலும் அது அழியாது நிலைத்திருக்கும் (பவிஷ்யத்). எனவே விலைமதிப்பற்ற பொருளை ஒருவர் இழக்க நேர்ந்தாலும் அதற்காக வருத்தப்படக் கூடாது". கிளியின் இந்த முதல் சத்ய வார்த்தையால் ஈர்க்கப்பட்ட வியாபாரி கிளியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். "எதையும் கண்ணால் காணும் வரை நம்பக்கூடாது, நீ அப்படி நினைக்கவில்லை அல்லவா?" என்று நம்பிக்கையுடன் கிளி கூறியது. " ஓ இது சரியான உண்மை" என்ற வியாபாரி கிளியை தென்னை மரத்தில் கொண்டு விட்டார். கிளி மரத்தில் உச்சிக்கு சென்று பின் கூறியது, "எனது வயிற்றில் இரண்டு வைடூரியங்கள் உள்ளன." உடனே வியாபாரி, "ஐயோ இந்த கிளியின் வார்த்தைகளை நான் ஏன் நம்பினேன்?, நான் கிளியை இழந்திருக்கக்கூடாது" என்று நினைத்தான்.
வியாபாரியின் துயர நிலையைக் கண்ட கிளி கூறியது, "நீங்கள் எனது இரண்டு சத்ய வார்த்தைகளையும் கேட்டீர்கள். இருந்தும் அதிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லையே, அதனை நீங்கள் நடைமுறையில் செயல்படுத்தவில்லையே?. முதலில் இரண்டு வைடூர்யங்களை இழந்து விட்டோமே என்று துயரப்பட்டீர்கள். இரண்டாவதாக எனது வயிற்றில் இரண்டு வைடூர்யங்கள் இருப்பதாக நம்பினீர்கள். "ஓ மூர்க்கனே வைடூர்யங்களை நான் எப்படி என் வயிற்றினுள் வைத்திருக்க முடியும்? என்ற கிளி மீண்டும் கூறியது, இறுதியாக எனது மூன்றாவது சத்ய வார்த்தைகளையும் கூறிவிடுகிறேன், " நாம் கூறும் போதனைகளை வெறுமனே கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டும் இருந்து விட்டு தனது வாழ்க்கையில் அதை செயல்படுத்த தவறுபவனுக்கு நீதியை போதிக்கக் கூடாது" என்று என் முன்னோர்கள் எனக்கு உரைத்தார்கள்" என்று கூறிய கிளி பறந்து சென்று விட்டது.
இக்கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒழுக்க நெறி:
1. புராணங்கள் மற்றும் இதிகாஸங்களிலிருந்து பற்பல அழகான அறநெறிக் கதைகளை பெரியவர்களிடமிருந்து நாம் கேட்டிருப்போம். அவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல் அதனால் இந்த சமுதாயத்திற்கு எந்த நன்மைகளையும் செய்ய இயலவில்லை என்றால்....நாம் வெறுமனே கதைகளைக் கேட்டு என்ன பிரயோஜனம்? எனவே நம்மிடமுள்ள அனைத்து கெட்ட குணங்களையும் அகற்றி நம்முடைய ஸநாதன தர்மத்தில் கற்பிக்கப்படும் அனைத்து ஒழுக்கங்களையும் உள்வாங்கி அதனை நமது வாழ்வில் கடைபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
2. கிளி சரியாகக் கூறியது போல், "நாம் இழந்ததற்காக ஒருபோது வருத்தப்படக் கூடாது. எது நடந்தாலும் அது நமது நன்மைக்காகவே என்று நினைக்க வேண்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment