யோகத்தின் பூர்ணத்வம்

 


பக்தியோகஸ்ச யோகஸ்ச மயா மானவ்யுதீரித:
யயோரேகதரேணைவ புருஷ: புருஷம் வ்ரஜேத்


மொழிபெயர்ப்பு

யோகச் செயல்களின் எட்டு வேறுபட்ட வகைகளை உள்ளடக்கிய அறிவார்ந்த யோகமுறை, பக்தியோகத்தின் முழுமையான நிலைக்கு வரும் குறிக்கோளுடன் நிகழ்த்தப்பட வேண்டும் என்று இங்கு பரம புருஷராகிய கபிலதேவர் விளக்குகிறார். அமரும் நிலைகளைப் பயிற்சி செய்வதாலும், முழுமையாகத் தன்னை நினைப்பதாலும் ஒருவர் திருப்தி அடைந்து விடக் கூடாது. சிறந்த தியானத்தால் ஒருவர் பக்தித் தொண்டின் நிலையை அடைய வேண்டும். முன்பு வர்ணிக்கப்பட்டதுபோல, ஒரு யோகி, பகவான் விஷ்ணுவின் வடிவத்தை, திருவடி முதல் திருமுடி வரை, கணுக்கால்களிலிருந்து கால்களுக்கு முழுங்கால்களுக்கு தொடைகளுக்கு, மார்புக்கு, கழுத்திற்கு என்று இந்த விதத்தில் படிப்படியாக முகம் வரை மனதில் எண்ணி பின்னர் நகைகளுக்கு உட்பட அனைத்துக்கும் தியானம்

செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. அருவ நிலை தியானம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

விளக்கமாக பரம புருஷ பகவானைத் தியானிப்பதால், ஒருவர் பகவானின் அன்பின் நிலைக்கு வரும்பொழுது, அதுவே பக்தி யோகமாகும். அந்த நிலையில் அவர் எல்லை கடந்த தத்துவ அன்பின் காரணமாக உண்மையில் பகவானுக்குத் தொண்டு புரிய வேண்டும். யோகப் பயிற்சி செய்து, பக்தித் தொண்டின் நிலைக்கு வருபவர் பரம புருஷ பகவானை அவரது தெய்வீக இருப்பிடத்தில் அடைய முடியும். புருஷ: புருஷம் வ்ரஜேத் என்று இங்கு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. புருஷ: உயிரினம் பகவானிடம் செல்கிறது. பரம புருஷ பகவானும் உயிரினமும் தன்மையில் ஒன்றே; இருவரும் புருஷர் என்று விளக்கப்படுகின்றனர். புருஷரின் தன்மை பகவான், மற்றும் உயிரினம் ஆகிய இருவரிடமும் உள்ளது. புருஷ என்றால்அனுபவிப்பவர்என்று பொருள், அனுபவிக்கும் உணர்ச்சி, உயிரினம், பகவான் ஆகிய இருவரிடமும் உள்ளது. வேறுபாடு என்னவென்றால் அனுபவிக்கும் அளவும் விகிதமும் சமமாக இருக்காது. உயிரினம் பரம புருஷ பகவான் போல இன்பத்தின் அதே அளவை அனுபவிக்க இயலாது. ஒரு செல்வருக்கும் ஏழைக்கும் இடையே நிலையை இதற்குச் சான்றாகக் காட்டலாம். இன்பத்திற்கான மனப்பாங்கு இருவரிடமும் உள்ளது. ஆனால் ஏழை மனிதனால் செல்வரைப் போல அதே அளவு அனுபவிக்க முடியாது. ஏழை மனிதன் தன் ஆசைகளைச் செல்வருடையதுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ளும்போது ஏழைக்கும் செல்வருக்கும் இடையில் ஒற்றுமை இருக்கும் பொழுது அல்லது பெரிய மனிதருக்கும் சிறிய மனிதருக்குமிடையில் ஒற்றுமை இருக்கும் பொழுது, மகிழ்ச்சியும் இன்பமும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அது பக்தி யோகம்போன்றது. புருஷ: புருஷம் வ்ரஜேத் உயிரினம் பகவானின் இருப்பிடத்தில் நுழையும் பொழுது, அவருக்கு இன்பம் தருவதன் மூலம் பகவானுடன் ஒத்துழைக்கும் பொழுது, அவர் அதே நிலையை அனுபவிக்கிறார் அல்லது பரம புருஷ பகவானைப் போல அதே அளவு இன்பத்தை அனுபவக்கிறார்.

மறுபுறம், உயிரினம் பரம புருஷபகவானைப் போன்றே வாழ்வினை அனுபவிக்க விரும்பினால், அவரது ஆசை மாயா எனப்படுகிறது, அது அவரை உலகச் சூழ் நிலையில் தள்ளுகிறது. பகவானுடன் ஒத்துழைக்காமலேயே தன்னுடைய சொந்த விருப்பத்தில் அனுபவிக்க விரும்பும் உயிரினம் உலோகாயத வாழ்வில் ஈடுபட்டுள்ளது. அவர் தன் இன்பத்தைப் பரமபருஷ பகவானுடன் சரியாகப் பொருத்தியவுடனே, அவர் ஆன்மீக வாழ்வில் ஈடுபடுகிறார். ஒரு சான்று இங்கு சுட்டப்படலாம், உடலின் வேறுபட்ட உறுப்புகள் மானுட வாழ்வைச் சுதந்தரமாக அனுபவிக்க இயலாது; அவை முழு உடலுடன் ஒத்துழைத்து, வயிற்றுக்கு உணவு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, உடலின் எல்லா வேறுபட்ட உறுப்புகளும் முழுவுடலுடன் ஒத்துழைத்து சமமாக அனுபவிக்கிறது. அதுவே அசிந்திய பேதாபேதத்தின் தத்துவமாகும், ஒரே சமயத்தில் ஒருமையும் வேற்றுமையும் ஆகும். வாழும் உயிரினம் பகவானுக்கு எதிராக வாழ்வை அனுபிக்க முடியாது அவர் பக்தியோகப் பயிற்சியின் மூலம் பகவானுடன் தன் செயல்களைப் பொருத்த வேண்டும்.

ஒருவர் யோக முறை அல்லது பக்தியோக முறை மூலம் பரம புருஷ பகவானை அணுக முடியும் என்று இங்கு கூறப்படுகிறது. உண்மையில் யோகத்திற்கும் பக்தியோகத்திற்கும் இடையில் வேறுபாடு இல்லை ஏனெனில் இரண்டின் குறிக்கோளும் விஷ்ணுவே என்பதை இந்த ஸ்லோகம் குறிக்கிறது. ஆனால் தற்காலத்திலோ, யோக முறை உருவாக்கப்பட்டு உள்ளது, அதன் குறிக்கோள் வெறுமையும் அருவமும் ஆகும். உண்மையில் யோகம் என்றால் பகவான் விஷ்ணுவின் வடிவத்தைத் தியானம் செய்தல் என்று பொருள். யோகப்பயிற்சி உண்மையில் தரமான வழிமுறையில் நிகழ்த்தப்பட்டால், யோகத்திற்கும் பக்தியோகத்திற்கும் இடையில் வேறுபாடு இல்லை.


ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.14.37 / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more