ராஜஸுய யாகத்தில் புனிதப்படுத்தப்பட்டிருந்த அழகிய கேசம் திரௌபதிக்கு இருந்தது. பாண்டவர்கள் அவளைப் பந்தயத்தில் தோற்றுப் போனதும், துச்சாதனன் அவளை அவமானப்படுத்த எண்ணி அவளது புகழுக்குரிய கூந்தலைத் தொட்டான். இந்நிலையில் திரௌபதி பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்தாள். அப்போது, குருட்சேத்திர யுத்தத்தின் பயனாக,
துச்சாதனன் மற்றும் அவனது குழுவினரின் எல்லா மனைவிகளும் தங்களது கூந்தல்கள் அவிழ்க்கப்பட்டவர்கள்
ஆகவேண்டும் என்று கிருஷ்ணர் முடிவு செய்தார். இவ்வாறாக குருட்சேத்திரப் போர்க்களத்தில் திருதராஷ்டிரரின் எல்லா
மக்களும், பேரன்களும் இறந்தபின், அவர்களது மனைவிகள் அனைவரும் விதவைகளானதால், தங்களது கேசங்களை அவர்கள் அவிழ்த்துவிட வேண்டியதாயிற்று. அதாவது, பகவானின் சிறந்த பக்தையான திரௌபதியை துச்சாதனன் அவமானப்படுத்தியதால், குரு வம்சத்தின் எல்லா
மனைவிகளும் விதவைகளாயினர். தனக்கு நேரும் அவமரியாதைகளை பொறுத்துக்கொள்ளும்
பகவான், தமது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார். மிகச்சிறந்த ஓராத்மாவை அவமானப்படுத்துவதால், ஒருவன் எல்லா
புண்ணியங்களையும், நல்லாசிகளையும் அனுபவிக்க முடியாமற் போய்விடும்.
ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.15.10 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment