காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கலியுகத்தில் மனிதர்கள்
தாங்கள் உண்பதற்காக நிறைய இறைச்சிக் கூடங்களைத் திறக்கின்றனர். அதனால் பழைய சடங்குகளும்,
விழாக்களும் கொண்டாடப்பட்டால் மக்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் மேலும் விலங்குகளைக்
கொல்வதற்குத் தூண்டப்படுவர். கல்கத்தாவில் உள்ள இறைச்சிக் கடைகளில் காளியின் படத்தை
வைத்திருப்பார்கள், மாமிசம் உண்போர் இதுபோலக் காளியின் படங்கள் வைத்திருக்கும் கடைகளிலேயே
இறைச்சிகளை வாங்குவர். ஏனெனில் அது காளிதேவிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியம் என்பது அவர்கள்
கருத்து. காளிதேவி சிவபெருமானின் சிறந்த துணைவியாதலினால் அவள் புலால் உண்ணமாட்டாள்
என்பதை அவர்கள் அறிவதில்லை. சிவபெருமான் சிறந்த வைணவராதலினால் அவர் புலால் உண்ணுவதில்லை.
மேலும் அவருக்கு அளிக்கும் படையல்களையே காளிதேவியும் ஏற்றுக்கொள்கிறாள். அதனால் அவள்
இறைச்சியோ, மீனோ உண்பதற்கான சாத்தியமே இல்லை. இதுபோன்ற நிவேதனங்கள் எல்லாம் காளிதேவியின்
அடியவர்களான பேய், பூதம், பிசாசு மற்றும் ராட்சர்களுக்கு அளிக்கப்படுவதாகும். அவர்களே
இவைகளை ஏற்றுக் கொள்கின்றனர். அதனால் மாமிசம் அல்லது மீன் போன்றவற்றைக் காளிதேவியின்
பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் பூதம் மற்றும் பிசாசுகளின் பிரசாதங்களையே
ஏற்றுக்கொள்கின்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment