ஜராசந்தன்

 


ஜராசந்தன் மிகவும் சக்தி வாய்ந்த மகத ராஜனாவான். அவனது பிறப்பும், செயல்களும் கவனத்தைக் கவரக்கூடியயவையாகும். அவனது தந்தையான பிருஹத்ரத ராஜனும் பெரும் செழிப்பும், சக்தியும் கொண்ட மகத ராஜனாக இருந்தவராவார். ஆனால் காசிராஜனின் இரு புதல்விகளை மணந்தபோதிலும் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் மனைவிகளுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தார். அங்கு ஒரு மகனைப் பெறும் வரத்தை அரசனுக்களித்த மஹாரிஷி ஒருவர், ராணிகள் உண்பதற்கு ஒரு மாங்கனியையும் கொடுத்தார். அதை உண்ட ராணிகள் விரைவில் கர்ப்பவதிகளாயினர். அரசர் மனம் மகிழ்ந்தார். ஆனால் கனிந்ததும், ராணிகள் ஒரு குழந்தையை இரு பாகங்களாக பெற்றெடுத்தனர். அவ்விரு பாகங்களும் காட்டில் வீசப்பட்டன. அங்கு வாழ்ந்து வந்த ஓரரக்கி புதுக் குழந்தையின் விந்தையான தசையையும் இரத்தத்தையும் கண்டு மகிழ்ந்து, அதைப் பற்றி அறிய ஆவல்கொண்டு, இரு பாகங்களையும் ஒன்றாக இணைத்தாள். குழந்தையும் முழுமையடைந்து உயிர் பெற்றது. ஜரா எனும் பெயர் கொண்ட அந்த அரக்கி, குழந்தையற்ற அரசனிடம் மனமிரங்கி, அவரிடம் சென்று அக்குழந்தையை பரிசாக அளித்தாள். அரக்கியிடம் மகிழ்ந்த அரசர், அவளது விருப்பப்படி அவளுக்குச் சன்மானம் அளிக்க விரும்பினார். அரக்கியும் குழந்தைக்குத் தன் பெயரையே சூட்டும்படி கேட்டுக் கொண்டாள். இவ்வாறாக ஜரா என்ற அரக்கியால் இணைக்கப்பட்டவன் என்று பொருள்படும்படி குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயர் சூட்டப்பட்டது. உண்மையில் இந்த ஜராசந்தன் விப்ரசித்தி எனும் அரக்கனின் முக்கிய பகுதியாகப் பிறந்த அவனது அம்சமாவான். அரசருக்கு வரமளித்த ரிஷி, சந்திர கௌசிகர் என்று அழைக்கப்பட்டார். அவர், குழந்தையின் தந்தையான பிருஹத்ரதரின் பிறப்பிற்கு முன்பே இக்குழந்தையைப் பற்றி ஜோசியம் கூறியிருந்தார்.

பிறப்பிலிருந்தே அவன் அசுர குணங்களைப் பெற்றிருந்ததால், இயல்பாகவே பேய் பிசாசுகளுக்கும், அசுரத்தனம் கொண்டவர்களுக்கும் நாதனான சிவபெருமானின் சிறந்த பக்தனாக இருந்தான். இராவணன் சிவபெருமானின் சிறந்த பக்தனாக இருந்தான். அதைப் போல்தான் ஜராசந்தனும்; கைது செய்யப்பட்ட அரசர்களை எல்லாம் அவன் மஹாபைரவரின் (சிவன்) முன் பலிகொடுத்து வந்தான். மேலும் தன் படை பலத்தால் பல சிற்றரசர்களை வென்று மஹாபைரவரின் முன் அவன் பலியிட்டு வந்தான். முன்பு மகத தேசம் என்று அழைக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் மஹாபைரவர் அல்லது காலபைரவரின் பக்தர்கள் பலருள்ளனர். ஜராசந்தன் கம்சனின் உறவினனாவான். எனவே கம்சனை கிருஷ்ணர் கொன்றதும், அவன் கிருஷ்ணரின் பெரும் எதிரியானான். மேலும் கிருஷ்ணருக்கும், ஜராசந்தனுக்கும் இடையில் பல சண்டைகள் நிகழ்ந்தன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனைக் கொன்றுவிட விரும்பினார். ஆனால் அதே சமயம் ஜராசந்தனின் படை வீரர்கள் கொல்லப்படுவதையும் அவர் விரும்பவில்லை. எனவே அவனைக் கொல்ல ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. கிருஷ்ணர், பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் ஏழைப் பிராமணர்கள்போல் மாறுவேடத்தில் ஜராசந்தனிடம் சென்று பிச்சை கேட்டனர். ஜராசந்தன் பிராமணர்களுக்கு தானம் செய்ய மறுத்ததேயில்லை. அவன் பல யாகங்களையும் கூட செய்திருக்கிறான். இருப்பினும் பக்தித் தொண்டிற்குச் சமமான ஒரு நிலையில் அவன் இல்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் அவனுடன் சண்டை செய்யும் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தனர். ஜராசந்தன் பீமனுடன் மட்டுமே சண்டை செய்வதென்று தீர்மானமாயிற்று. எனவே அவர் ஜராசந்தனின் விருந்தினர்களாகவும் அதே சமயம் அவனுடன் சண்டை செய்பவர்களாகவும் இருந்தனர். பீமனும், ஜராசந்தனும் சில நாட்கள் தொடர்ந்து சண்டை செய்தனர். பீமன் ஏமாற்றமடைந்தார். ஆனால் ஜராசந்தன் குழந்தைப் பருவத்தில் ஒன்றாக இணைக்கப்பட்ட விவரத்தை கிருஷ்ணர் பீமனுக்குத் தெரிவித்தார். இவ்வாறாக பீமன் அவனை மீண்டும் இரு கூறுகளாகப் பிய்த்துக் கொன்றார். பிறகு மஹாபைரவரின் முன் கொல்லப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டிருந்த எல்லா அரசர்களும் பீமனால் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு பாண்டவர்களுக்கு நன்றிக்கடன் பட்டதை உணர்ந்த அசரர்கள் யுதிஷ்டிர மகாராஜனுக்குக் கப்பம் செலுத்தினர்.


ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.15.9 / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more