மயதானவன் என்ற அரக்கன் காண்டவ வனத்தில் வசித்து வந்தான். காண்டவ வனத்திற்குத் தீ வைக்கப்பட்டபோது, அர்ஜுனனிடம் அவன் பாதுகாப்பை வேண்டினான். அர்ஜுனன் அவனைக் காப்பாற்றியதால், அவரிடம் தான் நன்றிக்கடன்பட்டிருப்பதை அரக்கன் உணர்ந்தான். இதற்குக் கைம்மாறாக, ஓர் அற்புதமான ராஜ சபையை அவன்
பாண்டவர்களுக்கு கட்டித் தந்தான். இது
எல்லா நாட்டு இளவரசர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
பாண்டவர்களின் அமானுஷ்யமான சக்தியை உணர்ந்த அவர்கள், யுதிஷ்டிர மகாராஜனுக்குப் பணிந்து, பொறாமையின்றி அவருக்குக் கப்பம் செலுத்தினர். அசுரர்கள் பௌதிக அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய அமானுஷ்யமான சக்திகளைக் கொண்டிருந்தனர். ஆனால் எப்பொழுதும் அவர்கள் சமூகத்தில் தொல்லை விளைவிப்பவர்களாக இருந்தனர். பௌதிக
விஞ்ஞானிகள் சமூகத்தில் தொல்லை ஏற்படுத்துவதற்காக சில பௌதிக அற்புதங்களைச் செய்யும் நவீன அசுரர்களாக உள்ளனர். உதாரணமாக, அணு
ஆயுதங்கள் மனித சமூகத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மயனும் அதே
போன்ற ஒரு பௌதிகவாதிதான். இத்தகைய அற்புதங்களைச் செய்யும் கலையை
அவன் அறிந்திருந்தான். இருப்பினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனைக் கொன்றுவிட விரும்பினார். காட்டுத் தீயும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்கராயுதமும் அவனை விரட்டியபொழுது சிறந்த பக்தனான அர்ஜுனனிடம் அவன் தஞ்சமடைந்தான். அர்ஜுனனும் பகவானின் கோபத் தீயிலிருந்து அவனைக் காப்பாற்றினார். எனவே
பக்தர்கள் பகவானை விட அதிக
கருணையுள்ளவர்களாக உள்ளனர். மேலும் பக்தித் தொண்டில் பக்தரின் கருணை
பகவானின் கருணையை விட அதிக
மதிப்புள்ளதாக இருக்கிறது. சிறந்த பக்தரான அர்ஜுனனால் அந்த அரக்கனுக்கு அபயம் அளிக்கப்பட்டதைக் கண்டதும் அக்னிதேவனும், பகவானும் அவனைத் துரத்துவதை நிறுத்திக் கொண்டனர். அர்ஜுனனிடம் நன்றிக் கடன்பட்டதை உணர்ந்த அரக்கன் தன்
நன்றியறிதலைக் காட்ட அவருக்கு ஏதேனும் சேவை செய்ய விரும்பினான். ஆனால் அவனிடமிருந்து எந்த
கைம்மாறையும் ஏற்றுக்கொள்ள அர்ஜுனன் மறுத்துவிட்டார். ஆனால் மயன் ஒரு
பக்தனிடம் தஞ்சமடைந்ததில் திருப்தியடைந்த பகவான், ஓர் அற்புதமான ராஜசபையைக் கட்டுவதன் மூலம் யுதிஷ்டிர மகாராஜனுக்கு பணிபுரியும்படி அவனுக்கு உத்தரவிட்டார். அதாவது, பக்தரின் கருணையால் பகவானின் பக்தருக்குப் வாய்ப்பு கிடைக்கிறது. பீமசேனரின் கதாயுதமும் கூட மயதானவனால் அளிக்கப்பட்ட ஒரு பரிசாகும்.
ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.15.8 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment