இந்தியர்கள் அனைவருமே மேற்கொள்ள வேண்டிய பிரதான கடமை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஆத்மௌபம்யேன என்ற சொல், தன்னுயிரைப் போலவே பிற உயிர்களைப் பற்றி எண்ணுவதைக் குறிக்கிறது. பக்தித்தொண்டு இல்லாமல், கிருஷ்ண உணர்வைப் பெறாமல், ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாது என்று மிகவும் புத்திசாலித்தனமாக ஒருவனால் முடிவு செய்ய முடியும். ஆகவே உலக முழுவதிலும் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதே எல்லா பக்தர்களுக்கும் உள்ள கடமையாகும். ஏனெனில் கிருஷ்ண உணர்வில்லாத அனைத்து ஜீவன்களும் பௌதிக வாழ்வின் துன்பங்களை அனுபவிக்கின்றனர். கிருஷ்ண உணர்வைப் பரப்புவதுதான் மிகச் சிறந்த பொதுநலத் தொண்டாகும். உண்மையில், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் இது, பர-உபகார அதாவது உண்மையான பொதுநலத்தொண்டு என்று விவரிக்கப்படுகிறது. இந்த பரோபகாரச் செயலானது, குறிப்பாக இந்தியாவில் மனிதர்களாகப் பிறந்துள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(சை.
ச. ஆதி 9.41)
கிருஷ்ண உணர்வு இல்லாததால் முழு உலகும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது. எனவே இந்தியாவில் பிறந்துள்ள மனிதர்கள் எல்லோரும் கிருஷ்ண உணர்வினால் தங்களுடைய வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொண்டு, உலக முழுவதிலுமுள்ள அனைவருக்கும் இந்த கிருஷ்ண உணர்வெனும் கடவுள் வாக்கைப் பரப்ப வேண்டம். இவ்வாறு கிருஷ்ண உணர்வுக் கொள்கையை நிறைவேற்றுவதன் மூலமாக மற்றவர்களாலும் மகிழ்ச்சியுடைய முடியும்.
ஸ்ரீமத்-பாகவதம் 7.7.53 / பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment