யுதிஷ்டிர மகாராஜன் பரீட்சித்து மகாராஜனை ஹஸ்தினாபுர அரியாசனத்தில் அமர்த்தியபின், பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரின் பேரனான வஜ்ரனை மதுராவின் அரசராக நியமித்தார். அதன்
பிறகு அவர் துறவு வாழ்வை ஏற்றார். குணத்தையும், செயலையும் அடிப்படையாகக் கொண்ட நான்கு சமூக பிரிவுகளும், நான்கு ஆன்மீக பிரிவுகளும் “வர்ணாஸ்ரம-தர்மம்” எனப்படுகிறது. வர்ணாஸ்ரம முறைதான் உண்மையான மனித
வாழ்வின் துவக்கமாகும். இம்முறையை நன்கு
பாதுகாத்து வந்த யுதிஷ்டிர மகாராஜன் பரீட்சித்து மகாராஜனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து தக்க
சமயத்தில் துறவறம் ஏற்றார். விஞ்ஞானபூர்வமான வர்ணாஸ்ரம முறை மனித
வாழ்வை நான்கு சமூகப் பிரிவுகளாகவும், நான்கு ஆன்மீக பிரிவுகளாகவும் வகுத்துள்ளது. ஒருவர் எந்த
சமூக பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர், பிரம்மச்சாரி, கிருஹஸ்தன், வானபிரஸ்தம் மற்றும் சந்நியாசி ஆகிய ஆன்மீக வாழ்வு நிலைகள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவையாகும். இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் வயதான பருவத்திலும் சுறுசுறுப்பான வாழ்விலிருந்து ஓய்வு பெற விரும்புவதில்லை. ஆனால் யுதிஷ்டிர மகாராஜன், அடுத்த வாழ்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்காக, சீரிய
அரசர் என்ற முறையில், சுறுசுறுப்பான நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னிச்சையாகவே விலகிக் கொண்டார். எல்லோருடைய வாழ்விலும் கடைசி பதிணைந்து அல்லது இருபது ஆண்டுகளை, வாழ்வின் உயர்ந்த பூரணத்துவத்தை அடைவதற்காக, பகவானின் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபடுத்தும் வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதையும் பௌதிக செயல்களிலும், பௌதிக இன்பத்திலும் கழித்துவிடுவது பெரும் முட்டாள்தனமாகும். ஏனெனில், பௌதிக சுகத்திற்கான பலன்நோக்குக் கருமங்களிலேயே மனம் ஆழ்ந்திருக்கும்வரை பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பில்லை. வாழ்வின் மிகவுயர்ந்த பூரணத்துவமான பரமபதத்தை அடையும் கடமையை யாரும் அலட்சியம் செய்துவிடக் கூடாது. இது தற்கொலைக்குச் சமமாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment