பக்தர்கள் மற்றும் ஆன்மீகிகளின் வேறுபட்ட தகுதிகளுக்கேற்ப
பரமபுருஷர் அநேக திவ்ய நாமங்களை ஏற்று அவர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். பகவான் அவரது
அருவ ரூபத்தில் உணரப்படும் பொழுது பரப்பிரம்மன் என்று அழைக்கப்படுகிறார். பரமாத்மாவாக
உணரப்படும்பொழுது அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறார். பௌதிக சிருஷ்டிக்காக வெவ்வேறு
வடிவங்களில் அவர் தம்மை விரிவடையச் செய்யும் பொழுது க்ஷீரோதகசாயி விஷ்ணு எனறும், கர்போதகசாயி
விஷ்ணு என்றும், காரணோதகசாயி விஷ்ணு எனறும் அழைக்கப்படுகிறார். இந்த மூன்று விஷ்ணு
ரூபங்களுக்கும் மேலான சதுர்வ்யூஹமாக (வாசுதேவர், சங்கர்ஷணர், பிரதியும்னர், அநிருத்தர்)
உணரப்படும்பொழுது, அவர் வைகுண்ட நாராயணர் என்று அழைக்கப்படுகிறார். அந்த நாராயண உணர்வுக்கு
மேலானது பலதேவ உணர்வாகும். அதற்கும் மேலானது கிருஷ்ண உணர்வாகும். பக்தித் தொண்டில்
முழுமையாக ஈடுபடும்பொழுது ஒருவனால் இவ்வெல்லா நிலைகளையும் உணர்ந்தறிய முடியும். அதன்பிறகு
மூடிக் கொண்டுள்ள ஒருவனது இதயம் முழுமையாக திறக்கப்பட்டு, பரமபுருஷரை அவரது பல்வேறு
ரூபங்களில் அவன் புரிந்து கொள்கிறான்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment