பரமபுருஷ பகவானுடைய வல்லமையின் முன் ஒருவரின் பௌதிக பலம் அர்த்தமற்றதாகும்.



தர்ம : க்வசித் தத்ர ந பூத-சௌஹ்ருதம்
த்யாக க்வசித் தத்ர ந முக்தி-காரணம்
வீர்யம் ந பும்ஸோ 'ஸதி அஜ-வேக-நிஷ்க்ருதம்
ந ஹி த்விதீயோ குண-ஸங்க-வர்ஜித :

மொழிபெயர்ப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஒருவர் மதத்தைப் பற்றிய முழு அறிவுவை பெற்றிருந்தும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்புடையவராக இல்லாதிருக்கக்கூடும். மனிதராகவோ, தேவராகவோ உள்ள ஒருவரிடம் துறவு இருக்கக்கூடும் ஆனால் அதுவே முக்திக்குக் காரணமாவது இல்லை. ஒருவர் பெரும் சக்தியைப் பெற்றிருந்தும், அவர் நித்திய காலத்தின் சக்தியைத் தடுக்க இயலாதவராக இருக்கக்கூடும். வேறொருவர் ஜட உலகப்பற்றைத் துறந்தவராக இருக்கக்கூடும் இருப்பினும் அவரை பரமபுருஷ பகவானோடு ஒப்பிட முடியாது. ஆகவே ஜட இயற்கை குணங்களின் ஆதிக்கத்திலிருந்து ஒருவரும் முற்றிலும் விடுபட்டவரல்லர்.

பொருளுரை
🌼🌼🌼🌼🌼🌼

இச்சுலோகத்தில் தர்ம : க்வசித் தத்ர ந பூத ஸௌஹ்ருதம் எனும் கூற்று மிகவும் முக்கியமானதாகும். பல இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அவரவர் மத கொள்கைகளை உறுதியாக பின்பற்றினாலும், எல்லா ஜீவராசிகளிடமும் அவர்கள் சமமானவர்களாக இல்லாதிருப்பதை உண்மையாகவே நாம் காண்கின்றோம். உண்மையில், சிறந்த சமயவாதிகளாக தங்களை அவர்கள் காட்டிக்கொண்டாலும், அற்ப மிருகங்களை அவர்கள் கொன்று குவிக்கின்றனர். அத்தகைய மதம் அர்த்தமற்றதாகும். ஸ்ரீமத் பாகவதம் 12.கூறுகிறது :

தர்ம: ஸ்வனுஷ்டித : பும்ஸாம்
விஸ்வக்ஷேண கதாஸுய:
நோத்பாதயேத் யதி ரதிம்
ஸ்ரம ஏவ ஹி கேவலம்

ஒருவன் தனது சொந்த மதத்தின் சமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் பெரும் நிபுணனாக இருக்கக்கூடும். ஆனால் பரமபுருஷ பகவானிடம் அன்பு கொள்ளும் சுபாவம் அவனுக்கு இல்லையெனில், மதக் கொள்கைகளை அவன் பின்பற்றுவதானது காலத்தை வீணாக்குவது மட்டுமேயாகும். வாசுதேவனிடம் அன்புணர்ச்சியை ஒருவன் விருத்தி செய்துகொள்ள வேண்டும். ( வாசஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப ) அனைவரிடமும் சினேகமாய் இருப்பதுவே பக்தனுக்குள்ள அடையாளமாகும்.( ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்) மதமென்னும் பெயரில் ஒரு மிருகம் கொல்லப்படுவதை பக்தரொருவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். வெளித் தோற்றத்தில் மட்டும் சமயவாதியாக இருப்பவருக்கும், ஒரு பகவத் பக்தருக்கும் இடையிலுள்ள வேறுபாடு இதுவேயாகும்.

சரித்திரத்தில் பல பெரும் வீரர்கள் இருந்ததை நாம் அறிகிறோம். ஆனால் மரணத்தின் கோரமான பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியவில்லை. மரணத்தின் வடிவில் கிருஷ்ணர் வரும்போழுது, மிகப் பெரிய வீரனாலும் பரமபுருஷரின் ஆளும் சக்தியிலிருந்து தப்ப முடியாது. இது கிருஷ்ணராலேயே விவரிக்கப்பட்டுள்ளது: ம்ருத்யு : ஸர்வ - ஹரஸ் சாஹம் பகவான், மரணமாகத் தோன்றி, பெயரளவேயான ஒரு வீரனின் பலத்தைப் பறித்து விடுகிறார்., ஹிரண்யகசிபுவின் முன் நரசிம்ஹ தேவர் மரண சொரூபியாகத் தோன்றிய போது தன்னையே அவனால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பரமபுருஷ பகவானுடைய வல்லமையின் முன் ஒருவரின் பௌதிக பலம் அர்த்தமற்றதாகும்.

(ஶ்ரீமத் பாகவதம் 8.8.21)


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more