ஸ்வர்கலோக வாசிகள் மனிதர்களைவிட மிக மிக நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால், அவர்கள் “அமரர்கள்,”அல்லது மரணமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நூறு ஆண்டுகளை மட்டுமே அதிகபட்ச ஆயுளாகக் கொண்டுள்ள ஒரு மனிதனுக்கு, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆயுள் மரணமற்றதாகவே காணப்படும். உதாரணமாக, பிரம்மலோகத்தில் 43,20,000 x 1000 சூரிய ஆண்டுகள் ஒரு பகல் என்று கணக்கிடப்படுவதை நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம். அதைப் போலவே மற்ற ஸ்வர்க லோகங்களில் ஒரு நாள் இந்த பூமியில் ஆறு மாதங்களென கணக்கிடப்படுகிறது. அங்குள்ள வாசிகள் அவர்களது கணக்குப்படி ஒரு கோடி ஆண்டுகள் வாழ்கின்றனர். எனவே, ஜடப் பிரபஞ்சத்திலுள்ள ஒருவரும் உண்மையில் சிரஞ்சீவியல்ல என்றபோதிலும், எல்லா உயர்கிரகங்களிலும் வாழ்பவர்களின் ஆயுள் மனிதர்களின் ஆயுளைவிட மிக மிக அதிகம் என்பதால், கற்பனையால் அவர்கள் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment