ஹரே கிருஷ்ண!!!!!
பீஷ்ம பஞ்சக்!!
சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்
உத்தன ஏகாதசி முதல் பௌர்ணமி வரை
இந்த வருடாவருடம் வரும்
இந்த வருடம் 04.11.2022 முதல் 08.11.2022 வரை உள்ள நாட்கள் இந்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில் ஆன்மிக பலன்கள் கிடைக்கும் ஆன்மிகத்தில் விரைவில் முன்னேற முடியும்.
இந்த பீஷ்ம பஞ்சக் என்ற நாட்களில் பல பக்தர்கள் முழுமையான (நிர்ஜல் -நீர் கூட அருந்தாமல்) விரதம் இருப்பார்கள்.
அல்லது , இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு முறை ஒரு சிறிய ஸ்பூன் அளவிற்கு பஞ்ச கவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது
முதல் நாள் : பசும் சாணம் உண்ணலாம்
இரண்டாவது நாள் : பசும் கோமியம் உண்ணலா
மூன்றாவது நாள் : பசும் பால் உண்ணலாம்
நான்காவது நாள் : பசும் தயிர் உண்ணலாம்
ஐந்தாவது நாள் : பஞ்ச கவ்யம் உண்ணலாம்
இது செய்யும் போது உங்களுடைய சாதானாஸ் சரியாக செய்ய வேண்டும்
அல்லது இந்த ஐந்து நாட்களில் முதல் நாள் மட்டும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இன்று தானியங்கள் பருப்பு வகைகள் நல்லெண்ணெய் உண்ணக்கூடாது.
(ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் என கீழே தகவல்கள் உள்ளது )
முதல் நாள் மட்டும் ஏகாதசி விரதம் இருந்துவிட்டு அடுத்த நான்கு நாட்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் உணவை உண்ணலாம் (அது மதியமோ அல்லது மாலையோ உண்ணலாம் )
இதில் காலை முழு வரதமும்
இரவு பழங்களை உண்ணலாம்.
மற்றும் நமது சதானாவை அதிகமாக செய்யலாம்
* சூரிய உதயத்திற்கு முன் 3.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு மங்கள ஆரத்தி முடுத்துவிடுங்கள்
* 18/ 25 /32 /48 /64 சுற்றை ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்யலாம்.
* குறைந்த பட்சம் காலை 7. மணிக்குள் ஜபத்தை முடிக்கவும்.
* தரையில் பாய் போட்டு படுக்கவும்
* இந்த நாட்களில் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கவும்
* நெய் விளக்கு ஆர்த்தியை பகவான் தாமோதருக்கு தினமும் 2 அல்லது 3 முறை காட்டவும்
* தாமோதர அஷ்டகம் மற்றும் ஸ்ரீபிரம்ம சம்ஹிதையை பாடவும்
* பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம், புருஷோத்தமரான பகவான் கிருஷ்ணா புத்தகத்தை படிக்கவும். இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால-கோபால ரூபம் சம்பந்தமான லீலையை படிக்கவும்
* கோயிலை தினமும் 1/ 3 முறை பரிக்கிரமா (சுற்றிவரவும்)செய்யவும்
* விரஜ தாமத்தை 1/ 3 முறை பரிக்கிரமா செய்யவும்
* புனிதமான குண்டங்களிலோ கங்கை யமுனா போன்ற புனித நதிகளிலோ குளிக்கவும்
* எண்ணெய் உபயோகிப்பதை விட்டுவிட்டு தூய பசு நெய்யையே பயன்படுத்தவும் (எண்ணெய் பலகாரங்களும் வேண்டாம் )
* பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கோயிலுக்கு நன்கொடை வழங்கவும்
* பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய்வேத்தியம் செய்யாத (பிரசாதம் ஆகாத ) உணவு உண்ண வேண்டாம்
இதனால் சதுர்மாஸத்தில் இந்த ஐந்து நாட்கள் நீங்கள் செய்யும் மேற்சொன்ன செயல்கள்
உங்களின் ஆன்மிக பயிற்சியில் மிகவும் அதிகமாக முன்னேற்றமடைலாம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கருணையை முழுமையாக பெறலாம்
*பகவான் ஸ்ரீகிருஷ்ணரில் உடலில் ஒவ்வொரு நாளும் வேறுவேறுவிதமானதை அர்பணிக்க வேண்டும்
முதல் நாள் : தாமரைப் பூவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்
இரண்டு நாள் : வில்வ இலையை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திரு-தொடையில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்
மூன்றாம் நாள்: வாசனை திரவியத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாபிகமலத்தில் அர்ப்பணிக்க வேண்டும்
நான்காம் நாள் : செம்பருத்தி பூவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திரு-தோளில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்
ஐந்தாம் நாள் : (மாலதி மலர் - கொடிமல்லிகை அல்லது பிச்சிப்பூவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சிரசில் படும்படி அர்ப்பணிக்க வேண்டும்
ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் விதம் :-----
விரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம்
சமஸ்கிருத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள்படும். இங்கு அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொன்றாவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும். ஏனெனில் மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் ஏதும் உண்டாவதில்லை. ஆனால் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்காவிட்டால் கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும். பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன். மக்களைப் பாவச்செயல்களில் செலுத்தி கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் கிருஷ்ணர் ஏகாதசியின் மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்க லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாற சொர்க்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி அன்று தானிய, பருப்பு (அரிசி, நவதானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், இட்லி,தோசை, சப்பாத்தி, பூரி, உப்புமா, கடுகு, உளுந்து தாளித்தது, காய்கறிகளில் பீன்ஸ், அவரை, மொச்சைவகையறா) இந்த வகை உணவுகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார்.
ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, நிலக்கடலை எண்ணெய், காய்கனிகள், பழங்கள், பால்,தயிர் போன்றவற்றை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிக்கு முந்திய நாளான தசமி அன்று பகல் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாவர்கள் துளசி தீர்த்ததையும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் ஆகும் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலன் கிடைப்பதில்லை.
ஏகாதசி அன்று செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே
ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என்ற மந்திரத்தை 108 முறை (ஒரு சுற்று) சொல்ல வேண்டும். இதுபோல குறைந்தபட்சம் 25 சுற்றுகள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மற்றும் பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். ஏகாதசி அன்று சினிமா பார்ப்பது, பரமபதம் ஆடுவது, வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்யகூடாது.
நிர்ஜலஏகாதசி (பாண்டவ அல்லது பீம ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் மற்ற 24 ஏகாதசின் பலனையும் அடையலாம்
வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையைக் காட்டுகிறார்.
முக்கிய குறிப்பு:--
பீஷ்ம பஞ்சக் கடைசி நாளில் சதுர் மாதத்தில் விரதம் இருந்தவர்கள்
கீரை, தயிர் , பால் மற்றும் உளுந்து இவற்றில் ஏதாவது உணவு தயார் செய்து பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நிவேதனம் செய்து பௌர்ணமி நிலவை பார்த்துவிட்டு தாமோதர ஆரத்தி எடுத்த பிறகு
சதுர் மாத விரதம் மற்றும் பீஷ்ம பஞ்சக் விரதம் இவற்றின் பலனை ஆன்மீக குரு மஹராஜ்/ ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்பணித்த பின் ( அவர்களின் பிரணாம மந்திரம் 3 முறை ஜபம் செய்து மலர்களை அவர்களுக்கு அர்பணித்த பின்) பிரசாதம் ஏற்றுக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்
ஹரே க்ருஷ்ண
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment