தேவையானவை:
பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
காய்ச்சிய பால் - கால் கப் தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை -
செய்முறை: பச்சரிசியையும், உளுந்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் சேர்த்து மையாக அரைக்கவும். அரைத்தவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
மாவானது வடை மாவு பதத்தைவிட கெட்டியாக, அதே சமயம் தொட்டால் பட்டு போல மிருதுவாக இருக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த மாவை சுண்டைக்காய் அளவுக்கு கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பரிமாறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, ஒரு பவுலில்
தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையை
சேர்த்து கலக்கவும்.
பொரித்த வைத்த பணியார உருண்டைகளை எடுத்து தேங்காய்ப்பால் கலவையில் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு பரிமாறவும். 15 நிமிடத்துக்கு மேல் ஊறினால் பணியாரம் கரைந்து போகும்... கவனம்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment