தூய பக்தர்கள் வேண்டும் வரம்
🍁🍁🍁🍁🍁🍁
ஒவ்வொரு மனிதனின் தேவைகளுக்கேற்ப பல்வேறுவிதமான வரங்கள் இருக்கின்றன. கர்மீக்களுக்குரிய வரம் என்னவென்றால் தேவலோகத்தை அடைவதாகும். ஏனென்றால் அங்கேதான் ஒருவனது வாழ்நாள் மிகவும் அதிகமாகவும், வாழ்க்கைத் தரமும் மகிழ்ச்சியும் மிகவும் உயர்வானதாகவும் இருக்கும் மற்றும் சில ஞானிகளும், யோகிகளும் வேண்டுவது பகவானது தோற்றத்துடன் இணைவதற்குரிய வரமாகும். இதுவே தோற்றத்துடன் இணைவதற்குரிய வரமாகும். இதுவே கைவல்யம் என்று அழைக்கப்படுகிறது. ஆகையினால் தான் பகவான் கைவல்ய பதி அதாவது கைவல்யம் என்னும் வரத்திற்கு நாயகன் அல்லது இறைவன் என்று அழைக்கப்படுகின்றார். ஆனால் பக்தர்களோ வேறு விதமான வரத்தைப் பகவானிடமிருந்து பெறுகின்றனர். பக்தர்கள் சொர்க்கலோகத்திற்கோ அல்லது பகவானது தோற்றத்துடன் இணைவதற்கோ அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. பக்தர்களைப் பொருத்தவரை கைவல்யம் அல்லது பகவானுடன் இணைவது என்பது நகரம் எனக் கருதத்தக்கதாகும். ‘நரக’ என்னும் வார்த்தைக்குப் பொருள் நரகம் என்பதாகும். அதனால் தான் இப்பௌதீக உலகில் தோன்றுகின்ற உயிர்கள் எல்லாம் ‘நாரக’ அதாவது நரகினை ஒத்த வாழ்க்கையினை உடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பிருது மகாராஜா கர்மீகள் விரும்பும் வரத்தினையோ அல்லது ஞானிகள் மற்றும் யோகிகள் விரும்பும் வரத்தினையோ தான் விரும்பவில்லை என்கிறார். பகவான் சைதன்யரின் மிகச்சிறந்த பக்தரான ஸ்ரீல பிரபோதானந்த சரஸ்வதீ பிரபு, கைவல்யம் என்பது நரக வாழ்க்கையினை விட உயர்ந்தது அல்ல என்றும் சொர்க்க லோகத்தில் மீது கொள்ளும் மோகம் என்பது உண்மையில் நிலையற்ற ஒன்று அல்லது கற்பனைக் காட்சியாகும் என்றும் கூறுகிறார். பக்தர்கள் பிரம்மதேவனின் நிலையினையோ அல்லது சிவபெருமானின் நிலையினையோ விரும்புவதில்லை,ஏன் அவர்கள் பகவான் விஷ்ணுவிற்கு சமமான நிலையினை அடையக் கூட விரும்புவதில்லை.
ஶ்ரீமத் பாகவதம் 4.20.23 / பொருளுரை வழங்கியவர் ஶ்ரீல பிரபுபாதர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment