கிணற்று தவளையும் கடல் தவளையும்

 


ஒரு கிணற்றில் தவளை ஒன்று நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது வெளி உலகம் பார்த்ததும் இல்லை. அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுபூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப்படுத்தி அதைஉண்டு தனது குடும்பத்துடனும் உறவினர்களுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது

 

ஒருநாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.

 

கினற்று தவளை கடல் தவளையிடம் 'நீ எங்கிருந்து வருகிறாய்?' என்றது

 

அதற்கு 'கடலிலிருந்து' என்று அது பதிலுரைத்தது.

 

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத் திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத்தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

 

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

 

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா?' என்று கேட்டது.

 

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' என்றது கடல் தவளை

 

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

 

காலங்காலமாக இருந்துவருகின்ற கஷ்டம் இது தான்.

 

நமக்கு கண்ணுக்கு புலப்படாத புலன்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக விஷயங்களை ஏற்க மறுக்கும் பௌதீக ஆராய்ச்சியாளர்களும் , தீவிர பௌதீக எண்ணங்களுடன் வாழும் மனிதர்களும் கடவுளை ஏற்க மறுகின்றனர்

 

அந்தச் தவளையின் சுறுசுறுப்பு, நம் தற்காலக் சில பௌதீக விஞ்ஞானிகளிடமும் , கிருமி ஆராய்ச்சியாளர்களுடனும் ஒப்பிடலாம். தான் புரிந்து கொள்ள முடியாத, கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை ஏற்றுகொள்ள மறுப்பதுடன் அதையே எல்லோரிடமும் விஷ பிரச்சாரம் செய்கிறார்கள்.அது தான் சரி என்று சாதிக்கிறார்கள்.

 

தன்னிடம் எந்தவித விடைகள் இல்லாமல் இருந்தும் . எல்லா சந்தேகளுக்கும் விடை வைத்திருக்கும் ஆன்மீக விஞ்ஞானிகளை நம்புவதும் இல்லை. அவர்கள் சாஸ்திரரீதியான விளக்கங்களை ஏற்ப்பதும் இல்லை .

 

இந்த கதை மூலமாக ஶ்ரீல பிரபுபாதர் தனது புத்தகங்களில் நிறைய எழுதியுள்ளார். அதில் ஶ்ரீமத் பாகவதம் 3.6.38 – பொருளுரையை வாசகர்களுக்காக மேலும் விளக்கமாக புரிந்து கொள்ள இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.🙏


தத்துவத்தினாலும், மனக் கற்பனையாலும், பரமாத்மாவை அறிய விரும்பும் தவளைத் தத்துவவாதிகள் சிலர் உள்ளனர். பரமபுருஷரைப் பற்றி ஒரளவிற்கு அறிந்துள்ள பக்தர்கள், பகவானின் மகிமைகள் கணக்கிட முடியாதவை, அல்லது நினைத்தற்கரியவை என்று ஒப்புக் கொள்ளும் பொழுது, தவளைத் தத்துவவாதிகள் அவர்களைக் குற்றம் கூறுகின்றனர். பசிபிக் சமுத்திரத்தின் அளவைக் கணக்கிட முயன்ற கிணற்றுத் தவளையைப் போல், இந்த தத்துவவாதிகள் பயனற்ற மனக் கற்பகையில் அதிக சிரமத்தை ஏற்க விரும்புகின்றனர். ஆதி பவியான பிரம்மாவைப் போன்ற பக்தர்களிடமிருந்து, உபதேசம் பெற்றுக் கொள்ள இவர்கள் மறுக்கின்றனர். பிரம்மதேவர் ஒராயிரம் தேவ ஆண்டுகளுக்கு கடும் தவத்தை மேற்கொண்டார். இருப்பினும் பகவானின் மகிமைகள் நினைத்தற்கரியவை என்று அவர் கூறுகிறார். எனவே தவளைத் தத்துவவாதிகளால் அவர்களுடைய மனக்கற்பனைகளைக் கொண்டு என்ன இலாபத்தை அடைய முடியும்?


மனக் கற்பனையாளர்கள் காற்று வேகத்தில் அல்லது மனோ வேகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு கற்பனை உலகில் சஞ்சரித்தாலும், பகவானின் மகிமைகள் நினைத்தற்கரியவை என்பதைத் தான் காண்பார்கள் என்று பிரம்ம-சம்ஹிதை கூறுகிறது. ஆனால் பக்தர்களோ, பரமனைப் பற்றிய அறிவைத் தேடியவைவதில் நேரத்தை வீணாக்காமல், தகுதியுள்ள பக்தர்களிடமிருநூது அடக்கத்துடன் பகவானின் மகிமைகளைப் பற்றி கேட்டறிகின்றனர். இவ்வாறாக கேட்டல், பாடுதல் எனும் இம்முறையினால் அவர்கள் உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். இத்தகைய பக்தர்களின் (மகாத்மாக்களின்) பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்ளும் பகவான் பின்வருமாறு கூறுகிறார்:


மஹாத்மானாஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:

பஜந்தி அனன்ய-மனஸோ ஞாத்வா பூதாதிம் அவ்யயம்

ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ் த்ருட-வ்ரதா:

நமஸ்யந்தஸ் மாம் பக்த்யா நித்ய-யுக்தா உபாஸதே

(பகவத் கீதை 9.13-14)


லக்ஷ்மி தேவி, சீதா தேவி, ஸ்ரீமதி ராதாராணி அல்லது ஸ்ரீமதி ருக்மிணி தேவி என்று அழைக்கப்படும் பகவானின் அந்தரங்க சக்தியை (பரா ப்ரக்ருதி) தூய பகவத் பக்தர்கள் தஞ்சமடைகின்றனர். இச்செயலினால் அவர்கள் உண்மையான மகாத்மாக்கள் ஆகின்றனர். மகாத்மாக்கள் மனக்கற்பனைகளில் ஈடுபடுவதை விரும்பாமல், பகவானின் மாறாத பக்தித்தொண்டை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றனர். பகவானின் செயல்களைப் பற்றி கேட்டல், பாடுதல் எனும் முக்கிய முறையினால் பக்தித் தொண்டு தோற்றுவிக்கப்படுகிறது. பகவானை ஒரளவிற்காவது அறிய முடியுமானால், அது பக்தித் தொண்டின் மூலமாகத்தான் சாத்தியமாகும். வேறு வழிகளால் அல்ல. எனவே இவ்வுன்னத முறையைப் பயில்வதன் மூலமாக மகாத்மாக்கள் பகவானைப் பற்றிய போதுமான அறிவைப் பெறுகின்றனர். ஒருவன் மனக் கற்பனையில் ஈடுபட்டு, மனித வாழ்வின் பொன்னான நேரத்தை விரயம் செய்யக்கூடும். ஆனால் அது பகவானைப் பற்றிய விஞ்ஞானத்தை அறிய ஒருவருக்கும் உதவாது. ஆனால் மகாத்மாக்களோ, மனக்கற்பனையால் பகவானை அறிவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் பகவான் பக்தர்களுடனோ அல்லது அசுரர்களுடனோ புரியும் அவரது உன்னதமான செயல்களைப் பற்றிக் கேட்பதில் அவர்கள் ஆனந்தம் அடைகின்றனர். இவ்விரண்டிலுமே ஆனந்தமடையும் பக்தர்கள் இப்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

 

ஶ்ரீமத் பாகவதம் 3.6.38 - பொருளுரை / வழங்கியவர் ஶ்ரீல பிரபுபாதர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


உத்வேக கதைகள் :-  https://t.me/udvegakathaigal

 

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more