"ஆத்மா" பிறப்பற்றவனும், நித்தியமானவனும், என்றும் நிலைத்திருப்பவனும், மரணமற்றவனும், மிகப் பழமையானவனுமாவான்
ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந யூய:
அஜோ நித்ய: சாஸ்வதோ ‘யம் புராணோ
“ஆத்மாவிற்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமற் போவதும் இல்லை. அவன் பிறப்பற்றவனும், நித்தியமானவனும், என்றும் நிலைத்திருப்பவனும், மரணமற்றவனும், மிகப் பழமையானவனுமாவான். உடல் அழிக்கப்படும் பொழுது அவன் அழிவதில்லை.” பௌதிக உடலின் காரணத்தால் உண்டாகும் சேதத்திலிருந்தும், மாற்றத்திலிருந்தும் விடுபட்டிருபூபதால், ஜீவாத்மா நித்தியமானதாகும். ஒரு மரமும், அதன் பழங்களும், மலர்களும் பற்றிய உதாரணம் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கிறது. ஒரு மரம் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கிறது. ஆனால் பருவங்களின் மாற்றத்தினால் அதன் பழங்களும், மலர்களும் ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இரசாயண சேர்க்கைகளினால் உயிரை உண்டாக்க முடியும் என்ற நவீன இரசாயண விஞ்ஞானிகளின் முட்டாள்தனமாக கொள்கையை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. சினை முட்டை மற்றும் விந்து ஆகியவற்றின் கலப்படத்தினால் ஒரு மனிதனுடைய ஜட உடல் பிறக்கிறது. ஆனால் சினை முட்டையும், விந்துவும் உடலுறவுக்குப் பிறகு ஒன்றாகக் கலக்கின்றன என்றாலும், அவ்வாறு கலக்கும் ஒவ்வொரு முறையும் கருத்தரிப்பதில்லை. அக்கலவையில் ஆத்மா புகுந்தாலொழிய ஒரு பெண் கருவுறுவது சாத்தியமில்லை. ஆனால் அக்கலவையில் ஆத்மா தஞ்சமடையும் பொழுது, உடலானது பிறந்து, இருந்து, வளர்ந்து மாற்றமடைந்து, நலிவடைந்து இறுதியில் மரணமடைகிறது. ஒரு மரத்தின் பழங்களும், மலர்களும் பருவ காலங்களில் வந்து போகின்றன. ஆனால் மரமோ அப்படியே நிற்கிறது. அதுபோலவே கூடுவிட்டு கூடுமாறும் ஆத்மா பல்வேறு உடல்களை ஏற்கிறது அந்த உடல் ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகிறது என்றாலும், ஆத்மாவானாது, மாற்றமின்றி அப்படியே இருக்கிறது (அஜோ நித்ய: சாஸ்வதோ ‘யம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே). ஆத்மா நித்தியமானது. அது மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் ஆத்மாவால் ஏற்றுக் கொள்ளப்படும் உடல்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.
இருவகையான ஆத்மாக்கள் உள்ளன. ஒன்று பரமாத்மா, மற்றது ஜீவாத்மா. ஜீவாத்மாவில் பல்வேறு தேக மாற்றங்கள் உண்டாவது போலவே, பரமாத்மாவில் பல்வேறு யுகங்களின் சிருஷ்டிகள் உண்டாகின்றன. இது தொடர்பாக ஸ்ரீல மத்வாச்சார்யர் பின்வருமாறு கூறுகிறார்:
(ஸ்ரீமத்-பாகவதம் 7.7.18 /
பொருளுரை )
Comments
Post a Comment