பகவத் பக்தர்கள் மற்றும் நாஸ்திகர்கள் என இருவகை மனிதர்கள் உள்ளனர். பகவத்
பக்தர் தெய்வீக குணங்களை வெளிப்படுத்துவதால் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் நாஸ்திகர்களோ அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அசுரனால் பரம புருஷரான விஷ்ணுவின் முன் நிற்க முடியாது. அசுரர்கள் பரம புருஷரை அழிக்க முயல்வதிலேயே எப்பொழுதும் சுறுசுறுப்பாக உள்ளனர். ஆனால்
உண்மையில் பரம புருஷர் தமது உன்னதமான நாமமாகவோ, உருவமாகவோ, குணங்களாகவோ, லீலைகளாகவோ அல்லது பல வகைப்பட்ட உபகரணங்களாகவோ தோன்றிய உடனேயே அசுரர்கள் முற்றிலும் முறியடிக்கப்பட்டு விடுகின்றனர்.
பகவானின் புனித நாமத்தைப் பாடுவதால் பேயும் பறந்துவிடும் என்று
கூறப்படுகிறது. பகவானுடைய உபகரணங்களின் பட்டியலில் சிறந்த முனிவர்களும, பகவத்
பக்தர்களும் கூட அடங்குவர். எனவே
சாதுவான பக்தரொருவர் தோன்றிய உடனேயே பிசாசு போன்ற பாவங்கள் உடனே அழிந்து விடுகின்றன. இதுவே வேத சாஸ்திரங்களின் தீர்ப்பாகும். எனவே, அசுரர்களும், பேய் பிசாசுகளும் தங்களுடைய கெட்ட ஆதிக்கத்தைச் செலுத்த முடியாதபடி, ஒருவர் புண்ணிய புருஷர்களான பக்தர்களுடன் மட்டுமே சகவாசம் கொள்ள வேண்டுமென சிபாரிசு செய்யப்படுகிறது.
(ஸ்ரீமத்-பாகவதம் 1.19.34 / பொருளுரை )
Comments
Post a Comment