மொழிபெயர்ப்பு
அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான். ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ, இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது. உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும். இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது. ஒ, மன்னனே! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ளமுயல்வாயாக. இதனைச் செய்வாயாக.
பொருளுரை
மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது. மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய், அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். படிப்படியாக மனம் ஆத்மாவின் கட்டளைக்குப் படியுமாறு பயிற்சிப்படுத்தப்பட வேண்டும். மனதின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஒன்றும் இல்லை. ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், மனதைக் கட்டுப்படுத்த ஒருவன் அதிகாலை விழித்தது முதல் இரவு உறங்கும்வரை காலணியால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை ஒருவன் செய்யவில்லையெனில் மனதின் ஆணைகளுக்கு அடங்கி ஆக வேண்டியுள்ளது. மற்றொரு சிறந்த முறை ஆன்மீக குருவின் கட்டளைகளைக் கடுமையாகப் பின்பற்றி இறைபணியில் ஈடுபடுவதாகும். பிறகு மனத் தானே கட்டுப்பாட்டிற்கு வரும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீல ரூபகோஸ்வாமிக்கு உபதேசிக்கிறார்:
ஒருவன் பக்தித் தொண்டின் விதையினை குரு மற்றும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் கருணையினால் பெறும்பொழுது அவனது உண்மை வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஆன்மீக குருவின் கட்டளைக்கு ஒருவன் கீழ்ப்படியும்பொழுது கிருஷ்ணரின் கருணையினால் அவன் மனதிற்குச் செய்யும் தொண்டிலிருந்து விடுதலை பெறுகிறான்.
(ஸ்ரீமத்-பாகவதம் 5.11.17 / பொருளுரை )
Comments
Post a Comment