நி:ஸ்ரேயஸ என்றால் “இறுதியாகச் சேரும்
இடம்” என்று பொருள் ஸ்வஸம்ஸ்தான என்றால் மாயாவாதிகளுக்குத் தங்குவதற்குக் குறிப்பிட்ட இடம் இல்லை
என்று பொருள். மாயாவாதிகள் தங்கள்
தனித்தன்மையைத் தியாகம்
செய்கின்றனர். அதனால் வாழும்
பொறி பகவானின் திவ்யமான உடலிலிருந்து வெளிப்படும் மாய ஒளியில் கலக்க
முடியும். ஆனால் பக்தருக்கென்று குறிப்பிட்ட இடம் உண்டு. கோள்கள் சூரியஒளியினை நம்பியுள்ளன, ஆனால் சூரியஒளிக்கு என்று
குறிப்பிட்ட நம்பகமான இடம் கிடையாது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோளை
அடையும் பொழுது, அவருக்குத் தங்கும்
இடமுண்டு. கைவல்ய என்று
அறியப்படும் ஆன்மீக
வானம் எல்லாப்
பக்கங்களிலும் இன்ப
ஒளியாக, பரம புருஷ பகவானின் பாதுகாப்பின் கீழ்
உள்ளது. பகவத் கீதையில் (14.27) குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம்: மாயையாகிய பிரம்ம
ஒளி பரம புருஷ பகவானின் உடலில் தங்கும். அதாவது பரம புருஷ பகவானின் உடலொளியே கைவல்யம் அல்லது மாய பிரம்மன். அந்த மாயா ஒளியில்
வைகுந்தங்கள் எனப்படும் ஆன்மீகக் கோள்கள்
உள்ளன, அதன் தலைமையானது கிருஷ்ண
லோகமாகும். சில பக்தர்கள் வைகுந்தக் கோள்களுக்கு உயர்த்தப்படுகிறார்கள், சிலர்
கிருஷ்ண லோகக்
கோளுக்கு உயர்த்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட பக்தரின் விருப்பப்படி, ஸ்வ—ஸம்ஸ்தான எனப்படும், அவரின் விருப்பமான இருப்பிடம், குறிப்பிட்ட இருப்பிடம் வழங்கப்படுகிறது. பகவானின் அருளால், பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தன்னை
உணர்ந்த பக்தர்
பூதவுடலில் இருந்தபோதிலும் அவர்
சேருமிடத்தை அவர்
புரிந்துகொள்கிறார். அதனால் அவர்
சந்தேகப்படாமல், நிலையாக பக்திச்
செயல்களைச் செய்கிறார், அவருடைய
ஜடவுடலை நீத்த
பிறகு, உடனே அவர் தான்
சென்று அடைய
வேண்டிய இடத்திற்கு, தன்னைத்
தயார்ப்படுத்திக் கொண்டபடி சென்று அடைகிறார். அந்த இருப்பிடத்தை அடைந்த பின்னர், இந்த ஜடவுலகிற்கு அவர் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.
இங்கு பயன்படுத்தப்படும் சொற்களாகிய லிங்காத்—விநிர்கமே என்றால் “நுட்பம், தூலம் என்ற இரண்டு
வகையான ஜடவுடல்களிலிருந்து விடுபட்ட பின்னர்” என்று பொருள். நுட்பமான உடல்,
மனம், அறிவுக்கூர்மை, போலி
ஆளுமை மற்றும்
மாசடைந்த உணர்வுநிலை இவற்றால் ஆனது.
தூல உடல்
என்பது, பூமி, நீர்,
நெருப்பு, காற்று, வான்
ஆகிய ஐந்து
மூலப்பொருட்களால் ஆனது.
ஒருவர் ஆன்மீக
உலகிற்கு மாற்றப்படும்பொழுது, அவர்
இந்த ஜடவுலகின் நுட்பமான, தூலமான உடல்கள்
இரண்டையும் துறக்கிறார். அவர்
தன்னுடைய தூய,
ஆன்மீக உடலுடன்
அகநிலை ஆகாயத்தில் நுழைகிறார், ஆன்மீகக் கோள்களில் ஒன்றில் அவர்
நிலைக்கிறார். மாயாவாதிகளும் நுட்பமான மற்றும் தூய உடல்களை நீத்த
பின்னர் ஆன்மீக
வானை அடைந்தாலும், அவர்கள்
ஆன்மீகக் கோள்களில் இருத்தப்படுவதில்லை; அவர்கள் விரும்புவதுபோல, பகவானின் திவ்ய உடலில்
இருந்து வெளிப்படும் தெய்வீக ஒளியில்
கலப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்வ ஸ்ம்ஸ்தானம் எனும்
சொல்லும் மிகவும்
குறிப்பிடத்தக்கது. ஸ்வ ஸம்ஸ்தானம் எனும்
சொல்லும் மிகவும்
குறிப்பிடத்தக்கது. உயிரினம் தன்னைத்
தயார்ப்படுத்திக் கொள்கிறது போலவே அதனுடைய
இருப்பிடமும் அமைகிறது. மாயையாகிய பிரம்ம
ஒளி மாயாவாதிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால்
பரம புருஷ
பகவானுடன், அவருடைய உன்னத
வடிவமாகிய நாராயணனாக வைகுந்தங்களிலும் அல்லது
கிருஷ்ணலோகத்தில் கிருஷ்ணருடனும் தொடர்புகொள்ள விரும்புபவர்கள், அந்த இருப்பிடங்களுக்குச் செல்வர், அங்கிருந்து அவர்கள்
ஒருபோதும் பூமிக்குத் திரும்புவதில்லை.
(ஸ்ரீமத்-பாகவதம் 3.37.28-29 / பொருளுரை )
Comments
Post a Comment