பொய் அகங்காரத்தின் முக்கிய காரியம் நாஸ்திகமாகும். தான் நித்தியமாக பரமபுருஷருக்குக் கீழ்ப்படிந்துள்ள அவரது பின்னப்பகுதி என்பதை மறந்து, சுதந்திரமாக மகிழ்ச்சியடைய விரும்பும் ஜீவன், இரு வழிகளில் செயற்படுகிறான். முதலில் அவன் சுய லாபத்திற்காக அல்லது புலன் நுகர்வுக்காக பலனை எதிர்பார்த்து செயற்படுகிறான். நீண்ட காலமாக பலன் கருதும் செயலில் ஈடுபட்டுக் களைப்படைந்த பின், அவன் மனோ தத்துவக் கற்பனையாளனாக மாறி, தான் கடவுளுக்குச் சமமான நிலையில் இருப்பதாக நினைக்கிறான். பகவானுடன் ஒன்றாகி விடுவதெனும் தவறான இந்த எண்ணம்தான் மாயா சக்தியால் விரிக்கப்படும் கடைசி வலையாகும். இந்த மாயா சக்தி, பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது.
பரபிரம்மத்தைப் பற்றிய தத்துவார்த்தமான கற்பனைகளை விட்டுவிடுவதுதான், பொய் அகங்காரத்திலிருந்து விடுபடுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும். மனோ தத்துவக் கற்பனைகளால் பரபிரம்மத்தை உணர முடியாதென்பதை உறுதியாக ஒருவன் அறிய வேண்டும். பரபிரம்மத்தை, அல்லது பரமபுருஷ பகவானைப் பற்றி, தகுதியுள்ள ஒர் அதிகாரியிடமிருந்து பணிவுடன் கேட்பதால் மட்டுமே அவரை உணர்ந்தறிய முடியும். இத்தகைய அதிகாரி, ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரெண்டு மகா ஜனங்களின் ஒரு பிரதிநிதியாவார். பகவானின் மாயா சக்தியை யாராலும் கடக்க முடியாது என்றாலும், மேற்கண்ட முறையால் அதை வென்றுவிட முடியும். இதை பகவத்கீதை (7.14) உறுதி செய்கிறது.
(ஸ்ரீமத்-பாகவதம் 3.5.31 / பொருளுரை )
Comments
Post a Comment