நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார்: அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன். நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன். இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் (சக்தி வாய்ந்த தேவர்கள்), “நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால், அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய்” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர்.
ஒருவன் பரமபுருஷரின் மகிமைகளையும், அவரது புனித நாமத்தையும் பாட வேண்டும் (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது, ஒருவன் பகவான் விஷ்ணுவைப் பற்றியும், அவரது மகிமைகளைப் பற்றியும் பாட வேண்டும், தேவர்களின் மகிமைகளை அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில முட்டாள்கள் தேவர்களின் பெயர்களைத் தொகுத்து கீர்த்தனமாகப் பாடும் முறையைக் கண்டு பிடிக்கின்றனர். இது குற்றமான ஒரு செயலாகும். பரமபுருஷரைத் துதிக்கும் முறையே கீர்த்தனம் எனப்படுகிறது, தேவர்களைத் துதிப்பதல்ல. சிலசமயங்களில் மக்கள் அல்லது பெரிய பெரிய மாயாவாதி சந்நியாசிகள்கூட காளி கீர்த்தனத்தை அல்லது சிவ கீர்த்தனத்தை கண்டு பிடிக்கின்றனர். எந்த நாமத்தைப் பாடினாலும் அதே பலனையே ஒருவன் அடைகிறான் என்று இவர்கள் கூறுகின்றனர். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நாரதமுனி ஒரு கந்தர்வராக இருந்த பொழுது, பெண்களின் சகவாசத்தில் பித்துப்பிடித்தவராய், பகவானை துதிக்க வேண்டும் என்ற உத்தரவை அலட்சியம் செய்து அதற்கெதிராக செயற்பட்டதை நாம் இங்கு காண்கிறோம். இவ்வாறாக ஒரு சூத்திரனாகும்படி அவர் சபிக்கப்பட்டார். அவர் காம இச்சை கொண்ட பெண்களுடன் சென்று சங்கீர்த்தன குழுவில் சேர்ந்து கொண்டது அவரது முதல் குற்றமாகும். திரைப்படப் பாடல்கள், அவற்றிற்கொப்பான பிற பாடல்கள் போன்ற சாதாரண பாடல்களை சங்கீர்த்தனத்திற்குச் சமமானதாக அவர் கருதியது இரண்டாவது குற்றமாகும். இந்த குற்றங்களுக்காக அவர் ஒரு சூத்திரனாக மாற்றப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
( ஶ்ரீமத் பாகவதம் 7.15.72 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment